சென்னை மெரினா ஆறுவழிச்சாலை.. சரியான முடிவா.. என்ன மாதிரியான சிக்கல் வரும் தெரியுமா?
சென்னை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மெரினா காமராஜர் சாலை 6 வழிச் சாலையாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அங்குள்ள 9 தலைவர்கள் சிலை இடமாற்றம் செய்யப்பட உள்ளது. உண்மையில் மற்ற இடங்களில் சாலை விரிவாக்கத்திற்கும், கடற்கரையையொட்டியுள்ள மெரினாவில் சாலை விரிவாக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அங்கு தற்போது உள்ள சாலையில் இருந்து 6 மீட்டர் அதிகரிக்கும்போது இப்போது உள்ள இயற்கை அழகு பறிபோகும் என்ற அச்சத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்துகிறார்கள்..
சென்னை மாநகரில் கிட்டத்தட்ட எல்லா சாலைகளுமே நான்கு வழிச்சாலைகளாகவும், முக்கிய சாலைகள் 6 வழிச்சாலைகளாகவும், அதி முக்கிய சாலைகள் 8 வழிச்சாலைகளாகவும் இருக்கின்றன. ஏரியாவிற்குள் செல்லும் சாலைகள் கூட நன்கு அகலமான இருவழிச்சாலைகளாக இருக்கின்றன. சென்னையில் என்னதான் சாலை விரிவாக்கம் செய்தாலும் நெரிசல் குறைந்தபாடில்லை.. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வேலைக்கு சென்று திரும்புவதால் பீக் அவர்களில் நிலைமை சிக்கலாகவே இருக்கிறது.

பாரிமுனை டூ ஓஎம்ஆர்
இதன் காரணமாக பல சாலைகள் பாதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தான் மெரினா காமராஜர் சாலையும் பாதிக்கப்படுகிறது. பாரிமுனையில் இருந்தும், வடசென்னையில் இருந்தும் ஓஎம்ஆர் பகுதியில் வேலை செய்யும் பலர், காமராஜர் சாலையை பயன்படுத்தி தான் வருகிறார்கள். இதுதவிர தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுமே மெரினா காமராஜர் சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் போது நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நெரிசலை குறைக்க 4 வழி சாலையாக உள்ள மெரினா காமராஜர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.
சாலை அகலம்
அதன்படி, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் 2.8 கி.மீ. நீளத்துக்கு விரிவுபடுத்தப்பட அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 2.8 கி.மீ. தூரத்துக்கு 23 மீட்டர் அகலத்துடன் 4 வழிச் சாலையாக மாற்றப்படும் எனறும், இதை கூடுதலாக 6 மீட்டர் அகலப்படுத்தி 29 மீட்டர் அகலத்துடன் 6 வழிச் சாலையாக மாற்றவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்
ஆனால் மெரினா சாலையை அகலப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் மெரினா காமராஜர் சாலையை ஒட்டி பொதுமக்கள் நடைபாதை அமைந்துள்ளது. அங்கு காந்தி முதல் காமராஜர் வரை வரிசையாக 9 சிலைகள் உள்ளன. அந்த சாலைகளை எல்லாம் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டியது வரும். அதன்படி உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் உள்ள 9 சிலைகளும் இடமாற்றம் செய்வது உறுதியாகி உள்ளது.
9 சிலைகள் அகற்றம்
அதாவது ஜி.யு.போப் சிலை, பாரதியார் சிலை, வீரமா முனிவர் சிலை, திருவள்ளுவர் சிலை, பாரதிதாசன் சிலை, அவ்வையார் சிலை, காமராஜர் சிலை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை மற்றும் கண்ணகி சிலை ஆகிய 9 சிலைகள் இடமாற்றம் செய்வது உறுதியாகி உள்ளது. அதேநேரம் மெரினா கடற்கரையை பொறுத்தவரை சென்னை மக்களுக்கு இருக்கும் கடற்கரை சுற்றுலா தலம் ஆகும். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வார இறுதியில் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.
என்ன சிக்கல்
இவர்கள் அனைவருமே காமராஜர் சாலையில் தான் செல்வார்கள். 6 வழிச் சாலை திட்டம் காரணமாக நெரிசல் ஓரளவு குறையும் என்றாலும், இந்த திட்டம் காரணமாக மெரினா அதன் அடையாளத்தை மட்டுமல்ல, அழகை இழக்கும் அபாயமும் இருக்கிறது. மெரினாவில் முழுமையாக நடைபாதைகளும், அற்புதமான கடல் மணல் பரப்பும் இருக்கிறது. ஆனால் மெரினா சாலையை 6 மீட்டர் அதிகரிக்கும்போது, கடல் மணல் பரப்பு வரை சாலை அகலம் ஆகும் என்பதால், அங்குள்ள இயற்கை அழகு பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.. மெரினா தனது இயல்பை இழந்துவிடும் என்றும் கூறுகிறார்கள். எனவே மெரினாவில் ஆறுவழிச்சாலை அமைக்கும் அரசு, அங்கு இயற்கை அழகு பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications