இது தங்கம் வாங்க சரியான நேரமா? ஆனந்த் சீனிவாசன் சொல்வது போல எப்போதும் உதவுமா! விலை எப்படி இருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலரும் தங்கள் முதல் சேமிப்பாகத் தங்கத்தைக் கருதி முதலீடு செய்து வருகின்றனர். இன்று தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ள நிலையில், வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்

தங்கம் தான் எப்போதுமே எளிய மக்களின் சேமிப்பில் முதல் இடத்தில் உள்ளது. ஆபத்தான காலத்தில் தங்கம் தான் பலருக்கும் கை கொடுக்கிறது என்பதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நம்ம ஊர் ஆனந்த் சீனிவாசன் தொடங்கிப் பல வல்லுநர்களும் கூட தங்கத்தைக் கட்டாயம் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அந்தளவுக்குத் தங்கம் என்பது சேமிப்பில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக உள்ளது.

 ஆனந்த் சீனிவாசன்

ஆனந்த் சீனிவாசன்

அதிலும் ஆனந்த் சீனிவாசன் குறைந்தது 400 கிராம் தங்கத்தை அனைவருக்கும் சேமிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அதேநேரம் மற்ற முதலீடுகள் அளவுக்குத் தங்கத்தில் லாபம் கிடைக்காது. பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் அதிகபட்சம் 8% வரை லாபம் கிடைக்கும். பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டால் கூட 6% வரை வட்டி கிடைக்கும். ஆனால், தங்கத்தில் அந்தளவுக்குக் கூட லாபம் கிடைக்காது. தங்கம் விலை அவ்வளவு விரைவாக அதிகமாகாது. அப்படியிருந்தாலும் கூட பலரும் தங்கத்தையே முதல் சேமிப்பாக வைத்து வருகிறார்கள். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

எப்போது

எப்போது

தங்கம் தான் எப்போதுமே ஆபத்தான காலத்தில் நமக்குக் கைகொடுக்கக் கூடியது. நாம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், அவ்வளவு ஏன் எந்த நாட்டில் இருந்தாலும் கூட தங்கத்தை வைத்து பணத்தைப் பெறலாம். அதை வைத்து மீண்டும் வாழ்க்கை தொடங்கலாம். இப்படி இக்கட்டான காலகட்டத்திலும் நம்மை காக்கும் ஒன்றாகவே தங்கம் இருக்கிறது. இதன் காரணமாகவே லாபம் குறைவாக இருந்தாலும் கூட பலரும் தங்கத்தின் பக்கம் செல்கின்றனர். நீண்ட கால நோக்கில் தங்கம் எப்போதும் அதிகரித்தே வரும். எனவே, இதுதான் தங்கம் வாங்கச் சரியான நேரம் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எனென்றால் நீண்ட கால நோக்கில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. காசு உள்ள போதெல்லாம் தங்கத்தை சிறுக சிறுக வாங்கலாம்.

 தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை

இந்தாண்டு புத்தாண்டு முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் 56 ஆயிரத்தை கூட நெருங்கியது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு சவரனுக்கு ரூ 42 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் தங்கத்தை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்களும் திட்டத்தைச் சற்று தள்ளி வைத்தனர். இந்தச் சூழலில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் 34 ரூபாய் குறைந்து ரூ.5190க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 41,520 ரூபாயாக உள்ளது. அதேபோல 24 கேரட் தங்கமும் ஒரு கிராம் ரூ.5,566ஆக உள்ளது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

 எப்போது உச்சம்

எப்போது உச்சம்

கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. அப்போது தங்கத்தின் விலை அதிகபட்சமாக 56,200 ரூபாயை எட்டியது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட இதே நிலை தான். வெளிநாட்டுச் சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு (சுமார் 28 கிராம்) 1,859 அமெரிக்க டாலராகவும் (1.53 லட்சம் ரூபாய்) வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 24.24 டாலராகவும் (2005 ரூபாய்) உள்ளது. டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் குறையும் போதிலும், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஆர்வம்

ஆர்வம்

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலத்திலும் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படும் என்பதால் தங்கத்தின் மீதே முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இன்று ஒரு நாள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கூட நீண்ட காலத்தில் தங்கத்தின் விலை எப்போதுமே ஏறவே செய்யும். நாம் கடந்த கால டேட்டாக்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் கூட தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது தெளிவாகத் தெரியும்.

 வரும் காலம்

வரும் காலம்

சந்தை ஏற்ற இறக்கம், நிதி மற்றும் பிற சொத்துகளின் மதிப்பு சரிவு காரணமாகத் தங்கத்தைப் பாதுகாப்பான புகலிடமாகக் கருதும் போக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி, உலகின் பல முன்னணி நாடுகளும் கூட ஆபத்திற்கு உதவத் தங்கத்தை வாங்கி குவித்து வருவதையும் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அதன் தேவை அதிகரித்து வருவதையே காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களுக்குத் தங்கத்தின் விலை பெரியளவில் உயராது என்ற போதிலும், பிற்பகுதியில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+