"பொறுப்புணர்வு வேண்டும்".. ஹைகோர்ட் சொல்லியும்.. வேல் யாத்திரையை தொடரலாமா பாஜக
கோர்ட் உத்தரவை மீறி யாத்திரை நடத்துவது சரியா என்ற கேள்வி எழுகிறது
சென்னை: இப்படி கோர்ட் அனுமதியே வாங்காமல், அரசின் தடையையும் மீறி பாஜக யாத்திரை செல்வது சரியா என்ற வாதம் பரவலாக எழுந்து வருகிறது.
தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவ.6-ம்தேதி தொடங்கி டிச.6-ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று எல்.முருகன் அறிவித்தார்.. இப்படி ஒரு அறிவிப்பு வெளியானபோதே, அதற்கு மாநில அரசு அனுமதி வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் சந்தேகமு எழுந்தது.
அதன்படியே, கொரோனா காரணம் காட்டப்பட்டு மறுக்கப்படவும் கோர்ட்டுக்கு சென்றது பாஜக தரப்பு.. அங்கும் கொரோனா காலம் என்பதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

யாத்திரை
இருந்தாலும் முதல்கட்டமாக திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை சென்றனர்.. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைதும் ஆயினர். இதற்கு பிறகு மறுபடியும் யாத்திரைக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பாஜக சார்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படவும், யாத்திரை சம்பந்தமாக முழு விவரம் கோர்ட் கேட்டிருந்தது. அதனால், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.. நிலுவையில் உள்ளதால், எந்த நடவடிக்கையும் கோர்ட்டையும் மீறி எடுக்க முடியாது.

எடப்பாடி
ஆனால், எத்தனை தடைகள் வந்தாலும் இந்த வேல் யாத்திரை வெற்றிபெறும் என்று அறிவித்து, அதன்படியே திருவொற்றியூரில் நடந்தது.. இதுதான் சர்ச்சையாகி வருகிறது.. மாநில அரசையும் மீறி, கோர்ட் அனுமதியையும் முழுமையாக பெறாமல் எப்படி பாஜக யாத்திரை நடத்துகிறது என்ற கேள்வி கேட்கப்படுகிறது.. இந்த யாத்திரையில் ஏராளமானோர் திரண்டு சென்று கொண்டிருப்பது அதைவிட ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

வேல் யாத்திரை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பரவாத நோய் தொற்று, இந்த வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா? என்று எச்.ராஜா ஒருபக்கம் கேள்வி எழுப்புகிறார்.. எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது என்றும் எச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், இந்த வேல்யாத்திரையால் வட சென்னை பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் வாகன நெரிசலில் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வண்டியும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நாட்டு வெடிகள்
மேலும், பாஜக தலைவர்களை வரவேற்கும் விதமாக, ராட்சத நாட்டு வெடிகளை தடையை மீறி, 2.5 அடி உயரத்துக்கு வெடித்ததால், பயங்கர சத்தம் எழுந்தது.. இதனால், சுற்றுவட்டார குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. இதைதவிர, தாரை தப்பட்டை முழங்க, பெண்கள் குத்தாட்டம் போட்டு கொண்டு போனது, பலரரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது.

சரியா?
இப்படி பல சிக்கல்களை நேற்றைய யாத்திரை ஏற்படுத்தியது.. அதேபோல, முதல்முறை யாத்திரை சென்றபோதும், திருத்தணியில், எஸ்பி யின் சட்டையை பிடித்து இழுத்து பாஜகவினர் மறியல் செய்தனர். இதுபோல எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்றுதான் மாநில அரசு தடைவிதித்திருந்தது.. ஆனால், கோர்ட் உத்தரவையும் மீறி பாஜகவினர் இப்படி யாத்திரை சென்று கொண்டிருப்பது சரியா என்ற கேள்வியை அவர்களிடமே விட்டுவிடலாம்.












Click it and Unblock the Notifications