சென்னை அபார்ட்மெண்ட்களில் மின் கட்டணத்தை குறைக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்க? நல்ல ஐடியா
சென்னை: சென்னை அபார்ட்மெண்ட்களில் மின்சார கட்டணத்தை குறைக்க சோலார் பிளாண்ட் போடுவது சரியாக இருக்குமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம். இதுபற்றி தொழில் நிபுணர் பாலு என்பவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.
"சமீபத்துல தலைநகர்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல கரண்ட் பில் அதிகமாக இருக்கு #சோலார் பிளாண்ட் போடனும்னு கேட்டாங்க..

அவுங்க அப்பார்ட்மெண்ட்டோட பவர் காமன் யூசேஜ் பவர் அனளைஸ் செஞ்சு அவுங்களோட 4மாச கரண்ட் பில் வாங்கி அதோட நம்ம லோடு அனளைஸ் செஞ்ச டேட்டாவ இனைச்சு பாத்தோம்.
முக்கியமாக வாட்டர் பம்ப் & WTP பிளாண்ட்டுக்கும் மட்டும் பல லட்சம் கட்டியிருக்காங்கனு டேட்டா கிடைச்சுது.. அவுங்க கிட்ட இருக்க இடத்துல 150kw சோலார் பேனல் போடலாம்.
அதற்கு பதிலாக வாட்டர் பம்ப்க்கு தனியாக 40kw சோலார் பேனல் மாட்டி சோலார் 30kw VFT ட்ரைவ் மாட்டி அது வழியாக வாட்டர் பம்ப் ஆன் பண்ணா 9மணி நேரம் சோலார் பவர் வழியகாவே ஓட்டலாம். வாட்டர் பம்ப் லோடு 90%சோலார் பவர் வழியாகவே ஓட்டலாம்..
இதற்கு செய்யும் இன்வெஸ்ட்மெண்ட் 3.5 வருடத்துல ரிட்டன் எடுக்கலாம்...இதே போல WTP பிளாண்ட்க்கு 60kw சோலார் பேனல் மாட்டி 50kw VFT ட்ரைவ் மாட்டி 9மணிநேரம் சோலார் பவர்ல ஓட்டலாம் மீதி உள்ள 4மணி நேரத்தை கிரிட்ல ஆன் பண்ணலாம்.
இதுக்கு செய்யும் இன்வெர்ஸ்மெண்ட் 4.5வருசத்துல ரிட்டன் எடுக்கலாம்னு ஒரு ரிப்போர்ட் சப்மிட் செஞ்சுட்டு அடுத்த வேலையா பாக்கர்துக்கு முன்னாடி நண்பரோட தோட்டத்துல இருக்க 1000 அடி ஃபோர்வெல்ல ஒரு ட்ரெயில் போட்டு பம்ப் ஆன் பண்ணலாம்னு ஐடியா பண்ணி உடனே போர்கால நடவடிக்கையாக ஒரு KSB 6hp மோட்டார் 1.5"வாட்டர் பைப் 750அடி, பவர் கேபிள் 900அடி ஃபோர்வெல்ல மாட்டி 8kw சோலார் பேனல் மாட்டி 7.5hp ABB VFD ட்ரைவ் அதற்கான கண்ட்ரோல் டிவைஸ் வழியாக மோட்டார் ஆன் பண்ணிட்டோம்.
காலைல 7:30 மணிக்கு மேல மோட்டார் ஆன் (Dc வோல்டேஜ் 325ல ஆன் கமாண்ட்) ஆகிறது மாலை 4:30வரை DC பவர் எபிசென்சி நல்லா கிடைக்கும் மணிக்கு சுமார் 7.5k Liter டூ 8k Liter கிடைக்குது 9மணி நேரத்துக்கு சுமார் 67k Liter தண்ணீர் கிடைக்கும் ஆக வாட்டர் பம்ப் சோலார் பவர் வழியாக ஓட்டும் போது பவர்க்காக செய்யும் செலவு 85%மேல் குறைக்க முடியும்னு தெரிய வருது.
முக்கியமாக RO பிளாண்ட் & ஓவர் டேங்க்ல வாட்டர் பம்ப் செய்வது& WTP பிளாண்ட் வச்சிருக்கவுங்க சோலார் பவர் VFT ட்ரைவ் வழியாக ஓட்டுனாங்கன்னா நல்ல லாபம் கிடைக்கும்." இவ்வாறு பாலு கூறினார்.
அதேநேரம் வீடுகளுக்கு செட் ஆகுமா என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "ரெண்டு மாசம் வெயிட் பண்ணுங்க குறைந்த செலவுல நல்ல யூனிட் எஃபிஷியன்சி ட்ரைவ் வரப்போகுது அப்ப மாட்டிக்கலாம்..! இன்வெஸ்ட்மெண்ட் 3வருசத்துல எடுக்கனும் அப்பத்தான் சரியாக இருக்கும் வீட்டு யூசேஜ்க்கு இப்ப சரியான ரிட்டன. எடுக்கற மாதிரியான சூழல் இல்லை என்று பாலு பதில் அளித்தார்.
தற்போது மின் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், மின் கட்டணத்தை குறைக்க பலரும் பல்வேறு வழிகளை தேடி வருகிறார்கள். ஆனால் தற்போதைய நிலையில் சோலார் பிளாண்ட் என்பது பெரிய அளவில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே உதவும் வகையில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications