சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மநீம கலைகிறதா.. கமலின் பிடி தளர்கிறதா.. கருத்துக் கணிப்பில் அழுத்தமாக " வாக்கு " செலுத்திய மக்கள்..!

மக்கள் நீதி மய்யம் கலைய தொடங்கிவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியே கலைகிறது என்று பொதுமக்கள் மனதில் பதிந்து உள்ளது.. மேலும் கமலின் பிடி தளர்கிறது என்றும் மக்கள் ஆணித்தரமாக தங்கள் கருத்தை, கணிப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

நடந்துமுடிந்த தேர்தலில் மநீம தோல்வியை தழுவியது.. கூட்டணி வைத்த சமக உட்பட கட்சிகள் தோல்வியை தழுவின.. அனைத்து தொகுதிகளிலும் மநீம தோல்வியை சந்தித்ததால், முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பத்மபிரியா உட்பட பலரும் ராஜினாமா செய்தனர்...

இதில் மகேந்திரன் சொன்ன காரணம், ஜனநாயக முறையில் கட்சி செயல்படவில்லை என்று பகிரங்கமாகவே சொன்னார். இதனால் கமலும் உச்சக்கட்ட டென்ஷன் அடைந்து அவரை துரோகி என்று விமர்சித்திருந்தார்.

கமல் சர்வாதிகாரி... மநீம தோல்விக்கான காரணங்களை அடுக்கும் முருகானந்தம் - கட்சியில் இருந்து விலகல் கமல் சர்வாதிகாரி... மநீம தோல்விக்கான காரணங்களை அடுக்கும் முருகானந்தம் - கட்சியில் இருந்து விலகல்

விலகல்

விலகல்

இதையடுத்து, கமல் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார்... அப்படி இருந்தும், முருகானந்தம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.. அதற்கு முருகானந்தம் கூறும் காரணம், நமது கட்சி என்று ஆரம்பத்தில் சொல்லி வந்த கமல், திடீரென அதனை மறந்து, என் கட்சி என்று சொல்கிறார்.. தேர்தலில் எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்..

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

100-க்கும் அதிகமான இடங்களை கூட்டணிகளுக்கு ஒதுக்கியதுதால் மநீம படுதோல்வி அடைந்தது.. தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய காரணமே கமல்தான்.. முழுக்க முழுக்க தன்னுடைய புகழுக்காகவே செயல்பட்டுள்ளார்.. தலைமை சரியாக இல்லை.. இனியும் இந்த கட்சிக்குள் இருந்தால் எந்த புண்ணியமும் இல்லை, என்னை தொடர்ந்து மேலும் சிலரும் இனி விலகுவார்கள்" என்றார். மகேந்திரனின் இந்த காரணம், கட்சிக்குள் மேலும் புகைச்சலை தந்துள்ளது.

ஆப்ஷன்

ஆப்ஷன்

இந்நிலையில், நாம் நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பலரும் விலகுவதை எதைக் காட்டுகிறது? என்ற கேள்வியை எழுப்பினோம்.. "அவர்களின் சுயநலத்தை காட்டுகிறது" என்ற ஆப்ஷனுக்கு 31.34 சதவீதம் பேரும், "கட்சி கலைகிறது" என்ற ஆப்ஷனுக்கு 46.19 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதேபோல "கமல் பிடி தளர்கிறது" என்ற ஆப்ஷனுக்கு 22.47 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

 அதிருப்தி

அதிருப்தி

இந்த கணிப்பை பொறுத்தவரை, கமல் மீதும், நிர்வாகிகள் மீதும் என இரு தரப்பு மீதுமே மக்களுக்கு அதிருப்தி இருப்பது தெரிய வருகிறது.. பதவி ஆசைக்காவே, இந்த நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்துள்ளனர் என்பதும், கட்சி தோல்வியடைந்தது என்றதும் ஆளாளுக்கு ராஜினாமா செய்வது அவர்களின் சுயநலம் என்பதை 31.34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.. அதேபோல, கட்சி கலைகிறது, கமல் பிடி தளர்கிறது என்ற ஆப்ஷன்களுக்குதான் பெருமளவு வாக்குகள் வந்துள்ளன.. அந்த வகையில், கமல் கட்சியை முதலில் இருந்து சரிசெய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்..!

English summary
Is Kamalhasans MNM party dissolving and what do people think
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X