சீனாவ பாருங்க.. கார்த்தி சிதம்பரம் போட்ட ஒற்றை ட்வீட்! வரிசைகட்டும் விஜய் ரசிகர்கள்! புது பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெரு நாங்கள் விஷயத்தில் தமிழ்நாடு ரொம்பவும் லேசியாக இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் முக்கிய நகரங்களில் தெரு நாய்கள் தொல்லைக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது என்கிற செய்தியை, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்திருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை தெரு நாய்கள் விஷயத்தில் மாநில அரசுக்குதான் பொறுப்பு இருக்கிறது. அப்படியெனில் தவெக அரசைதான் கார்த்தி சிதம்பரம் விமர்சித்திருக்கிறாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

தெரு நாய்கள் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய் கடி சம்பவம் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்திருந்தனர்.

Karti Chidambaram

தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த ஆண்டு 6.25 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 34 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 2.64 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும், 17 மரணங்களும் பதிவாகியிருக்கின்றன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவை ஏற்பட்டிருக்கிறது என்றும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

அதாவது, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை வளாகங்களில் இருக்கும் தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் காப்பகங்கள் அமைப்பதிலும், தெருநாய்களை கட்டுப்படுத்துவதிலும் களத்தில் இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் தெரியவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் கார்த்தி சிதம்பரம், தனது x பக்கத்தில் சீனா, தெரு நாய்களை கட்டுத்தியதாக வெளியான செய்தியை ரீ-ட்வீட் செய்திருந்தார். இவரது போஸ்ட் இரண்டு கோணங்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இவர் மத்திய அரசுக்கு எதிராகத்தான் இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், தெரு நாய்கள் மேட்டர் என்பது மாநில அரசின் கையில் இருக்கும் பிரச்சனை. மத்திய அரசு நாய் புடிக்கும் வண்டியை அனுப்பி.. தெருத்தெருவாக நாய்களை பிடிக்காது. அதை மாநில அரசுகள்.. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுதான் செய்ய வேண்டும் என்று இன்னொரு பிரிவினரும் கூறுகின்றனர்.

அப்படியெனில், கூட்டணியில் இருந்துக்கொண்டே கம்யூனிஸ்ட் கட்சிகளை போல.. காங்கிரஸும் விஜய்யை விமர்சிக்கிறதா? என்றும் விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கியிருக்கின்றனர்.

நீங்கள் சொல்லுங்கள் வாசகர்களே! கார்த்தி சிதம்பரத்தின் ட்வீட் பாஜகவுக்குக்கு எதிரானதா? அல்லது தவெகவை தாக்கியா? கமென்ட் பண்ணுங்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+