"பிரியா".. ரொம்ப நாளா பேசவே இல்லையே.. டக்குனு இறங்கி.. சட்டுன்னு ஒரு மாற்றம்.. என்னாச்சு?
திடீரென சென்னை மேயர் பிரியா ஆலோசனை கேட்க காரணம் என்ன
சென்னை: மேயர் பிரியாவின் இன்றைய பேச்சு, மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.. என்ன காரணம்?
பிரியா மேயராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட சீனியர்கள் அவருக்கு அருகிலேயே இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்..
அமைச்சர் சேகர்பாபு ஒருமுறை, "அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை" என்றார்.. வயது எதுவானாலும், மதிப்பிற்குரிய பதவிக்கு வந்துவிட்டவரை, சேகர்பாபு இப்படி கூறியிருந்தது அன்று பரபரப்பாக பேசப்பட்டது.

சலசலப்புகள்
அதேபோல, மேயர் பிரியா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதெல்லாம், பல நேரங்களில் விஷயம் தெரியாமல் திணறியதாகவும் சொல்லப்பட்டது.. அப்படித்தான் அம்மா உணவகம் குறித்து ஏடாகூடாமாக பேசி சலசலப்புகளில் சிக்கினார்.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.. இதற்கு பிறகுதான், செய்தியாளர் சந்திப்புகளுக்கு வருவதை பெரும்பாலும் பிரியா தவிர்த்து வந்தார்.. செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வந்தாலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்போது வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார் பிரியா..

பொறுப்பு
அதேசமயம், மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, பரவலாக வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், திடீரென லைம்லைட்டில் இன்று வந்துள்ளார் பிரியா.. சென்னையில் வளர்ச்சி மற்றும் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், இன்று நடைபெற்றது.. இந்தகூட்டத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டு பேசியதுதான், பல தரப்பிலும் சலசலப்பையும், அதேசமயம், பாராட்டையும் பெற்று வருகிறது.

கலந்தாய்வு
அவர் பேசும்போது, "இந்த கலந்தாய்வு கூட்டத்தின் முக்கிய நோக்கம், அவரவர் டிவிஷனில் இருக்கிற கோரிக்கைகளை, வளர்ச்சிகளை, உங்களது தேவைகளை, மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பிரச்சனைகளை தாராளமாக இங்கே நீங்கள் தெரிவிக்கலாம்.. அதற்கான பணிகள் அனைத்தும் இந்த கூட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும்.. மாமன்றங்களில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நிறைய கவுன்சிலர்கள் சொன்னார்கள்.

மேயர் பிரியா
எங்களால் எங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து சரியாக பேச முடியவில்லை.. தெளிவாக எடுத்து சொல்ல முடியவில்லை என்று சொல்கிறார்கள்.. அப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.. அதனால் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்.. அப்போது உங்கள் தரப்பில் உள்ள பிரச்சனைகளை இங்கே முன்வைக்கலாம்.. அதேபோல, வளர்ச்சி திட்டங்களுக்கு, ஏதாவது ஐடியா இருந்தாலும் எங்களிடம் சொல்லலாம்.. பூங்காக்கள், பள்ளிகள், சாலை பிரச்சனை இப்படியான பணிகள் குறித்து உங்கள் ஐடியாக்களை எங்களுக்கு சொல்லலாம்" என்று கேட்டுக் கொண்டார்.

ஐடியா
ஐடியா கொடுக்க சொல்லி பிரியா கேட்டது, இரண்டு வகையான கருத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.. உறுப்பினர்கள், மக்களிடம் ஐடியா கேட்பதற்கு, மேயர் எதற்கு? அதிகாரிகள் எதற்கு? இதை கூட நீங்களாகவே செய்ய மாட்டீர்களா? அதையும் இன்னொருவரிடம் கேட்டுதான் செயல்படுத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. மற்றொரு தரப்பினரோ, பிரியாவின் இந்த வேண்டுகோளை வரவேற்றுள்ளனர்.. ஈகோ இல்லாமல், அனைவரின் கருத்தையும் ஆலோசனையும் மதிக்கும் பாங்கு பாராட்டத்தக்கது என்று புகழ்ந்து வருகிறார்கள்.. சபாஷ் பிரியா..!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications