Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய அரசியலில் ஸ்டாலின் 'ரைசிங்'.. கோவப்பட்ட மம்தா? ராகுலின் மௌன யுத்தம்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ததுதான் இப்போது ஹாட் டாப்பிக். இந்த விமர்சனத்திற்கு பின் பல காரணம் இருக்கலாம் என்கிறார்களா.

"தெற்கிலிருந்து ஒரு சூரியன் உதிக்கிறது..." - இது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் கோஷமாக இருந்தது. ஆனால், இன்று 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், அந்த சூரியனின் வெப்பம் டெல்லி வரை தகிக்கிறது.

tamil nadu assembly elections 2026 DMk MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருவதுதான் இப்போது பலரது தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்கிறார்கள் திமுகவினர் குறிப்பாக, 'இந்தியா' கூட்டணியில் தோளோடு தோள் நின்ற மம்தா பானர்ஜியும், 'அன்புச் சகோதரர்' என்று உருகிய ராகுல் காந்தியும் இப்போது ஸ்டாலினைப் பார்த்து ஏன் முகம் சுளிக்கிறார்கள்?

மம்தாவின் 'ஷாக்' அட்டாக்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபகாலமாக ஸ்டாலினை நோக்கி வீசும் அம்புகள் திமுகவினருக்கும் இந்தியா கூட்டணியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. "ஸ்டாலினுக்கும் பா.ஜ.க-வுக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறது" என்று மம்தா கொளுத்திப் போட்டிருக்கும் திரி, தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்க அதிகாரிகளைத் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பியதைக் காரணம் காட்டி, ஸ்டாலினை பா.ஜ.க-வின் 'பி-டீம்' போல சித்தரிக்க மம்தா முயல்வது ஏன்?

உண்மை என்னவென்றால், தேசிய அளவில் பா.ஜ.க-வை எதிர்க்கும் 'ஒற்றை முகம்' தானாகத்தான் இருக்க வேண்டும் என்று மம்தா விரும்புகிறார் என்கின்றனர். ஆனால், ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறையும், பிராண்டிங்கும்.. அகில இந்திய அளவில் அவருக்குக் கிடைத்து வரும் 'திராவிட மாடல்' அங்கீகாரமும் மம்தாவின் பிரதமர் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ என்கிற அச்சமே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் முணுமுணுக்கிறார்கள்.

ராகுலின் மௌன யுத்தம்!

இன்னொரு பக்கம், 'சகோதரர் ஸ்டாலின்' என்று மேடைக்கு மேடை முழங்கிய ராகுல் காந்தி, இந்தத் தேர்தலில் தமிழகப் பக்கமே எட்டிப் பார்க்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு வெறும் 28 இடங்களை மட்டுமே ஒதுக்கி, 'பவர் ஷேரிங்' (ஆட்சி அதிகாரம்) கோரிக்கையை ஸ்டாலின் கறாராக மறுத்ததே ராகுலின் அதிருப்திக்குக் காரணம் என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்.

ஸ்டாலின் ஒரு பலமான தேசியத் தலைவராக வளர்ந்தால், அது காங்கிரஸின் மேலாதிக்கத்தை தென் இந்தியாவில் குறைத்துவிடும் என்கிற கணக்குப் போடத் தொடங்கிவிட்டது டெல்லி மேலிடம். அதனால்தான், ஸ்டாலினுக்காகப் பிரச்சாரம் செய்ய வராமல் ராகுல் மௌனம் காக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.

யாரை பயமுறுத்துகிறது ஸ்டாலினின் மூவ்?

ஸ்டாலின் தமிழக அரசியல்வாதி என்பதை தாண்டி தேசிய அளவில் பி.ஆர் தொடங்கி விட்டார். 2026 தேர்தலிலும் அவர் மீண்டும் வென்றுவிட்டால், அடுத்த டெல்லி தர்பாரில் தீர்மானிக்கும் சக்தியாக அவரே இருப்பார் என்பதுதான் மம்தா மற்றும் ராகுலின் கவலை. முக்கியமாக பாஜகவை எதிர்க்கும் தேசிய முகமாக ஸ்டாலின் உருவெடுக்க தொடங்கிவிட்டார்.

தேசிய அரசியலில் ஸ்டாலினின் வளர்ச்சி என்பது, மற்ற மாநிலத் தலைவர்களுக்கு 'இன்ஸ்பிரேஷன்' என்பதை விட 'இரிட்டேஷன்' ஆக மாறியிருப்பதுதான் தற்போதைய நிதர்சனம். மம்தாவின் கோபமும், ராகுலின் மௌனமும் ஸ்டாலின் மீதான கோபம் மட்டும்தானா? அல்லது அதை தாண்டி இதில் அரசியல் இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+