ஒருதலை பட்சமாக இருக்கிறார்.. 2024ல் அரசியலே காலி ஆகிடும்.. பிக் பாஸை விட்டு விலக கமல் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் ஹாசன் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார்.

Is MNM Kamal Haasan planning to leave Bigg Boss show hosting ahead of Lok Sabha election in 2024?

அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார். நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.

திமுக கூட்டணி: திமுக கூட்டணியில் இணைந்து கமல் ஹாசன் தமிழ்நாட்டில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட திட்டமிட்டுள்ள அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆ. ராசா - எல் முருகன் இடையே போட்டி நிலவும் பட்சத்தில் இங்கே அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

கோவை இல்லை என்றால்: கோவை இல்லாதபட்சத்தில், பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார்.

அவர் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பட்சத்தில், கமல் ஹாசன் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸில் இருந்து வெளியேற முடிவு: இந்த நிலையில்தான் கமல் ஹாசன் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் கமல் தொகுத்து வழங்கும் விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கமல் ஹாசன் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் சரியில்லை.

அவர் பிரதீப்பை விசாரிக்காமல் அனுப்பிவிட்டார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று விமர்சனம் செய்யப்பட்டது. தற்போது அவர் மாயாவை தீவிரமாக ஆதரிப்பதும், மாயாவிடம் மட்டும் நட்பாக பேசுவதும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அர்ச்சனாவை விமர்சனம் செய்வது என்று அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அவரின் இந்த செயல்.. அரசியலுக்கு வந்து பதவிகள் கிடைத்தாலும் அவர் இப்படித்தானே தவறாக முடிவுகளை எடுப்பார் என்று விமர்சனமாக மாறி உள்ளதாம். இதனால் கமல் ஹாசனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள்.. அரசியல் வாழ்க்கையே உங்களுக்கு போயிடும். வேண்டாம். இனி பிக் பாஸ் மூலம் பெயரை கெடுக்க வேண்டாம்.

வெளியே வந்து விடுங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம். இதனால் கமல் ஹாசன் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+