இருந்ததை விட குறைவான.. வாக்கு சதவிகிதத்திற்கு போகும் நாம் தமிழர்? சீமானுக்கு இதுவரை இல்லாத சவால்!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடங்களும் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் அந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.

நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது. ஆனால் கணிப்புகள் நாம் தமிழருக்கு எதிராக வந்துள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
024 லோக்சபா தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 இந்தியா டுடே: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2 தந்தி டிவி கணிப்பு: தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
4 நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.
வாக்கு சதவிகிதம்: இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உளவுத்துறை ரிப்போர்ட் தகவலின் படி நாம் தமிழரின் வாக்கு சதவிகிதம் 3ல் இருந்து 2 ஆக குறையும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
2 சதவிகித வாக்குகள் என்ற நிலைக்கு நாம் தமிழர் தள்ளப்படலாம். இதற்கு பின் அந்த கட்சியின் சின்னமான விவசாயி சின்னம் போய் மாற்று சின்னமான மைக் சின்னம் கிடைத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர்; 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடங்களும் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. மேற்கண்ட கருத்து கணிப்புகள் எதிலும் மற்ற கட்சிக்கு இடங்கள் கொடுக்கப்படவில்லை.
அதாவது திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி தாண்டி வேறு கூட்டணிக்கு இடங்கள் கொடுக்கப்படவில்லை. இப்படி இருக்க நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது கணிப்பில் தெளிவாகிறது.
கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.
ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம்.












Click it and Unblock the Notifications