நாம் தமிழருக்கு ஷாக்.. சீமான் அவ்வளவு கேட்டாரே.. விக்கிரவாண்டியில் ட்விஸ்ட்.. அதிமுக வாக்கும் வரலையே
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நாம் தமிழர் சரிவை சந்தித்து உள்ளது.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது

இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பராமரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைபடாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே சராசரியாக 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். இந்த முறை அதை தாண்டி கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பதிவாகி உள்ளது.
இதில் திமுகவிற்கு பாரம்பரியமாக செல்லும் 46-50 சதவிகிதம் சென்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள வாக்குகள் அதிமுக இல்லாமல் பாமக, நாம் தமிழருக்கு சென்று இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு மேலும் 10 சதவிகிதம் வாக்குகள் வந்தாலும் கூட.. 60 சதவிகிதத்தை திமுக எடுத்தாலும் கூட மீதம் உள்ள 20 சதவிகிதத்தை பாமக, நாம் தமிழர் பகிர்ந்து கொள்ளும்.
யாருக்கு செல்லும்?: இதில் அதிமுகவின் வாக்குகளை நாம் தமிழர் - பாமக ஆகியோரில் யார் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. வன்னியர்கள் வாக்குகள் காரணமாக பாமகவிற்கு செல்லுமா அல்லது நாம் தமிழரின் தொடர் உழைப்பு காரணமாக சீமானுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் வேகமாக வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றாகும். உதாரணமாக 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.
நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுத்தது. இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் 7.9 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சியின் சின்னம் போன நிலையிலும் இந்த வாக்குகள் கிடைத்தது.
கரும்பு விவசாயி சின்னம் பறிபோனாலும் கூட அந்த கட்சி தனியாக நின்று மைக் சின்னத்தில் இத்தனை வாக்குகளை பெற்றது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி வாக்குகள் 3 ஆக பிரிந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு திமுக எதிர்ப்பு வாக்குகள் எவ்வளவு செல்லவும் என்று தெரியவில்லை
சீமானுக்கு சான்ஸ்: இந்த தேர்தலில் மும்முனை போட்டி மட்டும் உள்ளது. அதிமுக களத்தில் இல்லை. இப்படி இருக்க திமுக எதிர்ப்பு வாக்குகள் சீமானுக்கு வந்தால் அது அரசியல் ரீதியாக அவருக்கு எழுச்சியாக இருக்கும். இதில் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உள்ளே நாம் தமிழர் 3ம் இடம் பிடித்தது.
2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது.
போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நாம் தமிழர் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது. அப்படி இருக்க இந்த தேர்தலும் சீமானுக்கு பெரிய சான்சாக மாறி உள்ளது.
ஆனால் சரிவு: இந்த முறை அதிமுக எங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று சீமான் கேட்டு இருந்தார். ஆனால் அப்படி இருந்தும் கூட அதிமுக வாக்குகள் சீமானுக்கு செல்லவில்லை. இதுவரை உள்ள முன்னணி நிலவரப்படி திமுகவின் அன்னியூர் சிவா 9500 வாக்குகள் பெற்றுள்ளார். பாமக சி அன்புமணி 4100 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் அபிநயா வெறும் 280 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
நாம் தமிழர் விக்கிரவாண்டியில் 3ம் இடம்.. அதுவும் மிக குறைவான வாக்குகளில் மூன்றாம் இடம் பிடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
-
விஜய்யை விட பல மடங்கு அதிகம்.. சீமான் அஃபிடவிட்டை டவுன்லோடு செய்தவர்கள் இவ்வளவு பேரா? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications