காட்சி மாறுது பாருங்க.. பாஜக தலைவராகும் நயினார்? கூட்டமாக போய் இருக்கையிலேயே பார்த்த அதிமுக தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அவரிடம் சென்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,பேசியது கவனம் பெற்றுள்ளது. ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு இருவரும் அவையின் உள்ளே நயினார் நாகேந்திரன் இருக்கைக்கே சென்று சுமார் 10 நிமிடம் அமர்ந்து பேசியுள்ளனர்.

இத்தனை நாட்களாக அவர் அவையில் உள்ளார். அவரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் சென்று இப்படி பேசியது இல்லை. ஆனால் இன்று திடீரென பேசியது கவனம் பெற்றுள்ளது.

2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

Is Nainar Nagendran being named as the new BJP Chief AIADMK leaders are meeting him

அண்ணாமலை மாற்றம்

2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை இருவரும் ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம்.

அமித் ஷா-எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமூகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன. அதிமுக தொடர்பான விவகாரங்களில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் அமித் ஷா, இந்த முறை இயல்பாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது.

Take a Poll

தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம், என்று இவர்கள் பேசி உள்ளனர்.இதையடுத்தே பாஜக தலைவர் பதவி மாற்றப்படலாம் என்கிறார்கள்.

ஜாதி ரீதியிலான இரண்டு கட்சியிலும் கவுண்டர்கள் இருந்தால் அது கூட்டணிக்கு பலன் தராது. அதனால் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதி பிரிவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் வந்தால் அது பாஜகவிற்கும் பலன், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் பலன் என்பதால் அவரை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்கிறதாம். தென்மாவட்டங்களில் சரிவே பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் ஆகும். அதோடு நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் நட்பாக செல்ல கூடியவர்.

இதன் காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தகவல் வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அவரிடம் சென்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,பேசியது கவனம் பெற்றுள்ளது. ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு இருவரும் அவையின் உள்ளே நயினார் நாகேந்திரன் இருக்கைக்கே சென்று சுமார் 10 நிமிடம் அமர்ந்து பேசியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+