Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க இப்படி சொல்லிட்டாரே! கலங்கிய ஓ பன்னீர்செல்வம்.. அஸ்தமனமாகும் அரசியல்! என்னது பாஜகவா?

பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று சென்றுள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கான கடைசி கதவு ஒன்றும் மூடப்பட்டு விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகி உள்ளார்.

கூட்டணி

கூட்டணி

இந்த நிலையில் நேற்று திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி, அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என்று கூறினார். மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக குஷி

பாஜக குஷி

எடப்பாடி கிட்டத்தட்ட பாஜகவிடம் பணிந்து சென்றுள்ளார் என்றுதான் கூற வேண்டும். பாஜகவுடன் பெரிதாக எடப்பாடி நெருக்கம் காட்டாமல் இருந்து வந்தார். பாஜகவின் பெயரை இவர் கூட்டணி கட்சிகளின் பணிமனையில் பயன்படுத்தவில்லை. அதேபோல் பாஜக தலைவர்கள் புகைப்படத்தையும் அவர் பயன்படுத்தாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி அறிவித்து இருக்கிறார். எடப்பாடியின் இந்த அறிவிப்பு பாஜக தரப்பிற்கு குஷியை ஏற்படுத்தி உள்ளதாம். லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்காக அலைய வேண்டிய நிலை கிடையாது. பாஜகவின் ரூட் இதனால் கிளியர் ஆகி உள்ளது.

ஓபிஎஸ் தேவையில்லை

ஓபிஎஸ் தேவையில்லை

இதுதான் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளதாம். அதிமுகவில் பாஜகவிற்கு ஆதரவாக இருந்தவர் ஓபிஎஸ்தான். ஓபிஎஸ் மூலம் நினைத்ததை சாதிக்கலாம் என்ற நிலைப்பாட்டில்தான் பாஜக இருந்தது. அதிமுக உள்ளே இருக்கும் பாஜக அனுதாபியாக ஓபிஎஸ் இருந்து வந்தார். ஆனால் தற்போது ஓபிஎஸ்சுக்கான தேவை இல்லாமல் போய்விட்டது. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடியே வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கான தேவை இப்போது இல்லாமல் போய்விட்டது.

 பாஜகவிற்கு ஆதரவு

பாஜகவிற்கு ஆதரவு

பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி சொல்லிவிட்டதால் அவர்களுடன் கூட்டணி வைக்க ஓபிஎஸ் உதவியை பாஜக நாட வேண்டியது இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடியும் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்து உள்ளது. பாஜக வழியாக அதிமுக உள்ளே நுழையலாம் என்று அவர் நினைத்து இருந்தார். ஆனால் தற்போது பாஜக - எடப்பாடி நெருக்கம் ஆகி உள்ளனர். இதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கான கடைசி கதவும் மூடப்பட்டு விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+