ஊட்டிக்கு வந்தா ஊட்டியே வெந்து கிடக்குதே? 29 டிகிரியில் உருகுது நீலகிரி.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவின் கோடைக்கால சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஊட்டியில் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. எப்போதும் இதமான குளிரும், பனிமூட்டமுமாக இருக்கும் மலைகளின் அரசி, தற்போது 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தகித்துக் கொண்டிருக்கிறாள். குளிர்ச்சியைத் தேடி மைல் கணக்கில் பயணம் செய்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியில் நிலவும் இந்த அசாதாரண வெப்பத்தைக் கண்டு பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வெயில் தாங்க முடியலன்னு ஊட்டிக்கு வந்தால், ஊட்டியே வெந்து போய் கிடக்கிறதே என்று நொந்து கொள்கிறார்கள்.

கடந்த 3 நாட்களாகவே ஊட்டியில் பகல் நேர வெப்பநிலை 26 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை என்பது, கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் வெப்பமாகும்.

Ooty Weather Nilgiris News Summer Heat Climate Crisis Hill Station News Travel Alert Tamil Nadu Tourism Environmental Impact Global Warming Ooty Diaries

24 ஆண்டுக்கு பிறகு 29 டிகிரி செல்சியஸ்

வழக்கமாக நிலவும் குளுமை காணாமல் போய், சமவெளிப் பிரதேசங்களைப் போன்றே வெப்பம் உணரப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டும் 14 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைகிறது.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கோடை மழை பெய்ய வேண்டும். ஒருவேளை மழை தப்பினால், வரும் நாட்களில் உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரும் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள இயற்கைக்கும் பெரும் அச்சுறுத்தல். குறிப்பாக, கோடை சீசனுக்காகத் தயார் செய்யப்பட்ட பல லட்சம் மலர்ச் செடிகள் இந்த வெயிலால் வாடி கருகும் அபாயத்தில் உள்ளன.

ஏன் இந்த மாற்றம்? எல் நினோவின் தாக்கம் என்ன?

அன்று காடுகளாக இருந்த இடங்கள் இன்று கட்டிடக் காடுகளாக மாறிவிட்டன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி ஊட்டிக்குள் நுழைவதால் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து, சுற்றுப்புறச் சூழல் சூடாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோடை மழை குறைந்ததும் இந்த மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மற்றொருபுறம் எல் நினோ (El Nino) என்ற இயற்கை நிகழ்வின் தாக்கமும் இருப்பதாகக் கருதப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடைவதையே எல் நினோ என்கிறோம். இது உலகளவில் வெப்பநிலையை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தும் வல்லமை கொண்டது. இதன் நேரடி பாதிப்பைத் தான் இன்று ஊட்டி அனுபவித்து வருகிறது.

ஊட்டியில் புழுக்கம் தாங்க முடியல

இரவுநேரத்தில்கூட வெப்பம் அதிகரித்து புழுக்கமாக உள்ளது.. வழக்கமாக குளிருக்காக ஜன்னல்களை கூட திறக்காத ஊட்டிவாசிகள் இப்போது இரவு நேரங்களிலும் ஜன்னலை திறந்து வைத்து உறங்குகிறார்கள்.. பகல் நேரத்தில் மொட்டை மாடிகளில் வெயில் மண்டையை பிளக்கிறது.. இப்போதே இந்த வெயில் என்றால், இன்னும் மே மாதம் எப்படி இருக்குமோ என்று மலை மாவட்ட மக்கள் கதிகலங்குகிறர்கள்.

லாட்ஜ் கட்டணங்கள்

வெப்பம் ஒருபுறம் வாட்ட, மறுபுறம் தங்குமிடங்களின் கட்டண உயர்வு பயணிகளை நிலைகுலையச் செய்கிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களின் வாடகையை உயர்த்திவிட்டதாகப் புகார் கூறுகின்றனர். ஆனால், ஓட்டல் உரிமையாளர்களோ, வருடத்தில் இந்த 2 மாதம்தான் தங்களுக்கு வருமானம் உள்ளதாக சொல்கிறார்கள். எனினும் இந்த ரூம் வாடகை விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இரு தரப்புக்கும் பொதுவான ஒரு சுமுகமான முடிவை எடுத்தால் நல்லா இருக்கம்.

மீண்டு வருது நீலகிரி

கடந்த மாதம் சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஊட்டியின் பல ஓட்டல்களில் சில மெனுக்கள் நீக்கப்பட்டன. இப்போதுதான் நிலைமை சீராகி வருகிறது. அதற்குள் இந்த வாடகை உயர்வு பயணிகளைத் திகைக்க வைத்துள்ளது. அத்துடன் வெயிலும் கொளுத்தி விரட்டி தள்ளுகிறது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டின் அனுபவம் இதற்கு நேர்மாறாக இருந்தது. அப்போது அதிக மழைப்பொழிவு, மண் சரிவு அபாயம் மற்றும் இ-பாஸ் கட்டுப்பாடுகள் காரணமாகப் பயணிகளின் வருகை மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெயில் கொளுத்துகிறது. இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தால் ஓரளவு நெரிசல் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இயற்கையின் இந்த அதீத மாற்றம் ஊட்டியில் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பசுமையும் குளிர்ச்சியும் மறைந்து, கான்கிரீட் கட்டிடங்களும் வெப்பமும் ஆதிக்கம் செலுத்துவது எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு பெரிய எச்சரிக்கை மணியாகும்.
ஊட்டி: தென்னிந்தியாவின் கோடைக்கால சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஊட்டியில் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. எப்போதும் இதமான குளிரும், பனிமூட்டமுமாக இருக்கும் மலைகளின் அரசி, தற்போது 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தகித்துக் கொண்டிருக்கிறாள். குளிர்ச்சியைத் தேடி மைல் கணக்கில் பயணம் செய்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியில் நிலவும் இந்த அசாதாரண வெப்பத்தைக் கண்டு பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வெயில் தாங்க முடியலன்னு ஊட்டிக்கு வந்தால், ஊட்டியே வெந்து போய் கிடக்கிறதே என்று நொந்து கொள்கிறார்கள்.

கடந்த 3 நாட்களாகவே ஊட்டியில் பகல் நேர வெப்பநிலை 26 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை என்பது, கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் வெப்பமாகும்.

24 ஆண்டுக்கு பிறகு 29 டிகிரி செல்சியஸ்

வழக்கமாக நிலவும் குளுமை காணாமல் போய், சமவெளிப் பிரதேசங்களைப் போன்றே வெப்பம் உணரப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டும் 14 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைகிறது.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கோடை மழை பெய்ய வேண்டும். ஒருவேளை மழை தப்பினால், வரும் நாட்களில் உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரும் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள இயற்கைக்கும் பெரும் அச்சுறுத்தல். குறிப்பாக, கோடை சீசனுக்காகத் தயார் செய்யப்பட்ட பல லட்சம் மலர்ச் செடிகள் இந்த வெயிலால் வாடி கருகும் அபாயத்தில் உள்ளன.

ஏன் இந்த மாற்றம்? எல் நினோவின் தாக்கம் என்ன?

அன்று காடுகளாக இருந்த இடங்கள் இன்று கட்டிடக் காடுகளாக மாறிவிட்டன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி ஊட்டிக்குள் நுழைவதால் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து, சுற்றுப்புறச் சூழல் சூடாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோடை மழை குறைந்ததும் இந்த மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மற்றொருபுறம் எல் நினோ (El Nino) என்ற இயற்கை நிகழ்வின் தாக்கமும் இருப்பதாகக் கருதப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடைவதையே எல் நினோ என்கிறோம். இது உலகளவில் வெப்பநிலையை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தும் வல்லமை கொண்டது. இதன் நேரடி பாதிப்பைத் தான் இன்று ஊட்டி அனுபவித்து வருகிறது.

ஊட்டியில் புழுக்கம் தாங்க முடியல

இரவுநேரத்தில்கூட வெப்பம் அதிகரித்து புழுக்கமாக உள்ளது.. வழக்கமாக குளிருக்காக ஜன்னல்களை கூட திறக்காத ஊட்டிவாசிகள் இப்போது இரவு நேரங்களிலும் ஜன்னலை திறந்து வைத்து உறங்குகிறார்கள்.. பகல் நேரத்தில் மொட்டை மாடிகளில் வெயில் மண்டையை பிளக்கிறது.. இப்போதே இந்த வெயில் என்றால், இன்னும் மே மாதம் எப்படி இருக்குமோ என்று மலை மாவட்ட மக்கள் கதிகலங்குகிறர்கள்.

லாட்ஜ் கட்டணங்கள்

வெப்பம் ஒருபுறம் வாட்ட, மறுபுறம் தங்குமிடங்களின் கட்டண உயர்வு பயணிகளை நிலைகுலையச் செய்கிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களின் வாடகையை உயர்த்திவிட்டதாகப் புகார் கூறுகின்றனர். ஆனால், ஓட்டல் உரிமையாளர்களோ, வருடத்தில் இந்த 2 மாதம்தான் தங்களுக்கு வருமானம் உள்ளதாக சொல்கிறார்கள். எனினும் இந்த ரூம் வாடகை விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இரு தரப்புக்கும் பொதுவான ஒரு சுமுகமான முடிவை எடுத்தால் நல்லா இருக்கம்.

மீண்டு வருது நீலகிரி

கடந்த மாதம் சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஊட்டியின் பல ஓட்டல்களில் சில மெனுக்கள் நீக்கப்பட்டன. இப்போதுதான் நிலைமை சீராகி வருகிறது. அதற்குள் இந்த வாடகை உயர்வு பயணிகளைத் திகைக்க வைத்துள்ளது. அத்துடன் வெயிலும் கொளுத்தி விரட்டி தள்ளுகிறது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டின் அனுபவம் இதற்கு நேர்மாறாக இருந்தது. அப்போது அதிக மழைப்பொழிவு, மண் சரிவு அபாயம் மற்றும் இ-பாஸ் கட்டுப்பாடுகள் காரணமாகப் பயணிகளின் வருகை மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெயில் கொளுத்துகிறது. இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தால் ஓரளவு நெரிசல் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இயற்கையின் இந்த அதீத மாற்றம் ஊட்டியில் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பசுமையும் குளிர்ச்சியும் மறைந்து, கான்கிரீட் கட்டிடங்களும் வெப்பமும் ஆதிக்கம் செலுத்துவது எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு பெரிய எச்சரிக்கை மணியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+