Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவாலயம் பக்கம் போறாரா ஓபிஎஸ்? செங்கோட்டையன் பட்ட பாடு பலனை தருமா? திமுகவை விட தவெக நல்ல சாய்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார் மூத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். ஒருகாலத்தில் அதிமுகவின் முதன்மை முகமாகவும், 3 முறை முதல்வராகவும் இருந்த ஓபிஎஸ், இன்று அரசியல் எதிர்காலம் குறித்த மிகக் கடினமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறார்... இன்றைய தினம் தை பிறந்துள்ள நிலையில், தன்னுடைய கூட்டணி முடிவையும் அறிவிப்பாரா? என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளார்..

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு முழுமையாக மூடப்பட்ட நிலையில், தனது அரசியல் வாழ்வை மட்டுமல்லாது, தனது மகன், நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்கள் மற்றும் முழு அணியையும் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு ஓபிஎஸ் மீது விழுந்துள்ளது.

OPS DMK Sengottaiyan

அதிமுக - ஓபிஎஸ் உறவு - முற்றுப்பெற்ற பிளவு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சிக்குள் ஏற்க தயாராக இல்லை என்பதை கடந்த சில மாதங்களாகவே தெளிவுபடுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு, "ஓபிஎஸ், சசிகலா இருவருக்கும் அதிமுகவில் இடமில்லை" என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி தரப்பு உறுதியாக மட்டுமல்ல பிடிவாதமாகவும் நின்றது.

இதன் பின்னணியில், ஓபிஎஸ் "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு" என்ற அமைப்பை தனி அரசியல் இயக்கமாக மாற்றி செயல்படுத்த தொடங்கினார். இது, அதிமுக தலைமையிலிருந்து அவர் முழுமையாக விலகியிருப்பதற்கான அரசியல் அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது.

ராமநாதபுரம் தேர்தல்

கடந்த நாடாளுமன்ற= தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ், அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடம் பிடித்தார். இந்த வெற்றி, தனது அரசியல் செல்வாக்கு இன்னும் முடிவடைந்து விடவில்லை என்பதைக் காட்டும் முயற்சியாகவே கருதப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில், ஓபிஎஸ்ஸை சுற்றியிருந்த பல முக்கிய ஆதரவாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒருபின் ஒருபடியாக அணிமாறத் தொடங்கியதால், அவரது அரசியல் பலம் மெதுவாக சிதற தொடங்கியது.

அமமுக டிடிவி தினகரன்

ஓபிஎஸ் தற்போது டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த கூட்டணி அரசியல் ரீதியாக அவருக்கு கூடுதல் பலத்தை தரவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது...

மற்றொரு புறம், டிடிவி தினகரனை தனது கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஓரளவு இறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே சமயம், ஓபிஎஸ்ஸை சேர்ப்பதில் எந்த சமரசத்தையும் காட்டாமல் பிடிவாதமாக இருப்பது, ஓபிஎஸ் தரப்பை கடும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால், "ஓபிஎஸ்ஸிடமிருந்து தினகரனை பிரிக்க எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொள்கிறது" என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் அடிபடுவதை பார்க்க முடிகிறது..

சமீபத்தில் நடைபெற்ற "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக" மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பலரும் ஒரே குரலில், "எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவே முடியாது. 3 தொகுதிகளுக்காக அந்த அணிக்கு செல்லக்கூடாது" என்று வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த கருத்தை ஓபிஎஸ்ஸும் வெளிப்படையாக வழிமொழிந்தார். இதன் மூலம், அதிமுக கூட்டணிக்கு திரும்பும் வாய்ப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

மூடப்பட்ட அதிமுக வாசல்

சமீபத்தில் நடைபெற்ற "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக" மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பலரும் ஒரே குரலில், "எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவே முடியாது. 3 தொகுதிகளுக்காக அந்த அணிக்கு செல்லக்கூடாது" என்று வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த கருத்தை ஓபிஎஸ்ஸும் வெளிப்படையாக வழிமொழிந்தார். இதன் மூலம், அதிமுக கூட்டணிக்கு திரும்பும் வாய்ப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

ஓபிஎஸ் முன் உள்ள மூன்று தேர்வுகள்

அப்படியானால் தற்போதைய சூழலில், ஓபிஎஸ் முன் 3 அரசியல் ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஒன்று, பாஜக கூட்டணி, இரண்டாவது, திமுக கூட்டணி, மூன்றாவது தமிழக வெற்றி கழகம் ஆகும்...

இதில் பாஜக கூட்டணியில் இணைந்தால், தேசிய அரசியல் ஆதரவு கிடைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் தனிப்பட்ட வாக்குவங்கி குறைவாக இருப்பது ஓபிஎஸ்ஸுக்கு பெரிய சவாலாக இருக்கும்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றால், உடனடி அரசியல் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால் நீண்ட கால அரசியல் அடையாளம் திமுகவில் கரைந்துவிடும் அபாயம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

தவெக - ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தேர்வா?

எனவே, நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் ஓபிஎஸ் சாய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆவார்..

இவர்தான் தொடர்ந்து ஓபிஎஸ்ஸை தவெக-வில் இணைக்க முயற்சி செய்து வருகிறார். தவெக-வில் இணைந்தால், தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி, கௌரவமான அதிகாரப் பகிர்வு, மற்றும் தனக்கான உரிய அந்தஸ்து வழங்கப்படும் என செங்கோட்டையன் தூது விட்டதாகவும் தெரிகிறது-.

ஓபிஎஸ் எந்த பாதையை தேர்வு செய்வார்?

ஆனால் பல அரசியல் ஏமாற்றங்கள், சட்டப் போராட்டங்கள், உட்கட்சிப் பிளவுகள் போன்றவற்றை அனுபவித்த ஓபிஎஸ், இனி வெறும் பெயரளவு பதவிக்காக மற்றொரு கட்சியில் இணைய விரும்ப மாட்டார் என்பதே அவரது ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது..

கவுரவமான அதிகாரப் பகிர்வு, தெளிவான அரசியல் அடையாளம், மற்றும் தனது அணியின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, ஓபிஎஸ் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை அறிவிக்கக்கூடும்.. இப்போதுவரை அமைதியாகவே இருந்து வருகிறார்.. இன்னும் எந்த முடிவையும் சொல்லவில்லை.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மட்டுமே ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் சொல்லி வந்தார்..

இன்று தை மாதம் பிறந்துள்ளது.. செங்கோட்டையனின் தூது முயற்சி வெற்றி பெற்று, ஓபிஎஸ் தவெக-வை நோக்கி பயணிப்பாரா?அல்லது அரசியல் கணக்குகள் மாறி, அதிமுக வாசலில் ஏதேனும் புதிய கதவுகள் திறக்கப்படுமா? அல்லது பாஜக, திமுக என முற்றிலும் வேறு பாதையை அவர் தேர்வு செய்வாரா? தெரியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+