பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுகிறாரா? பாஜக தலைவர் அண்ணாமலை பரபர பதில்!
சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அண்ணமாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுகிறாரா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் தமிழக அரசு செயல்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்கிறது, தமிழக அரசு தடுக்கவில்லை.

மின்கட்டணம் உயர்வு மூன்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் எங்குமே 27 மாதத்தில் மூன்று முறை உயர்த்தியதாக வரலாறு கிடையாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதற்கான எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை. அவரது நோக்கம் எல்லாம் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கம். அதனால்தான் மத்திய அரசு திட்டங்கள் இவ்வளவு வந்த போதும் அது பொதுமக்களுக்கு சென்று சேரும் போது ஊழலோடுதான் சென்று சேர்கிறது. அதற்கு காரணம் மாநில அரசுதான்.
மோடி எங்கே போட்டியிடுவார்: தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவிலை. பிரதமர் மோடி தமிழகத்தில் குறிப்பாக கோயம்புத்தூர், கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று மக்களே பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் எங்களை பொறுத்தவரை மோடி எங்கே போட்டியிட்டாலும் எங்களுக்கு சந்தோஷம் தான்.
அதுவும் குறிப்பாக தமிழகத்தில் போட்டியிட்டால் இரட்டிப்பு சந்தோஷம் தான். ஆனால் இதுவரை இது உறுதி செய்யப்படவில்லை. எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. தொண்டர்கள், மக்களிடம் எதிர்ப்பார்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிகள் முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர்வைத்துள்ளன. உண்மையான இந்தியா, உண்மையான பாரதம் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர்?:இன்று அதிகமாக காங்கிரசை விட என்டிஏ கூட்டணி அதிக மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. பிரதமர் சொல்வது போல என்டிஏவை பொருத்துவரை பெரிய கட்சி சிறிய கட்சி என்று ஏதும் கிடையாது. அனைவரும் என்டிஏவுடைய உறுப்பினர்கள் தான்.. என்டிஏவை வலிமைப்படுத்த வந்தவர்கள்.. என்டிஏவை பொறுத்தவரை முழுமையாக பாஜகவை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியில் எத்தனை பேர் காங்கிரசை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
யாரு தலைவர் என்றே தெரியாத ஒரு கூட்டணி.. நிதிஷ் குமார் தலைவரா, காங்கிரஸ் தலைவரா, மம்தா பானர்ஜி தலைவரா.. பிரதமர் வேட்பாளர் யார்?.. என்டிஏவில் நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளர். 3வது முறையாக பிரதமர் மோடி பிரதமராக வருவார். ஆனால் அங்கு யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியவில்லை. எந்தவித அடிப்படையிலும் ஒற்றுமையில்லாத, முற்றிலும் முரண்பட்ட கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளனர்.
உண்மையான இந்தியா: ஏதோ ஒரு மிருகம் ஒன்று தன் மீது கோடு போட்டுக்கொண்டு நானும் புலி என்று சொல்வது போல இருக்கிறது. பாஜகவின் அரசியல் எப்போதும் ஒரு தேர்தலுக்காக இருக்காது. மக்களுக்கு தெரியும் உண்மையான இந்தியா யார்.. உண்மையான பாரதம் யார்.. உண்மையான என்டிஏ யார் என்று.. இன்று அவர்கள் போட்ட வேஷங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிவினை வாதம் பற்றி பேசியவர்கள்.. காஷ்மீர் இந்தியாவோடு இல்லை என்று சொன்னவர்கள்.. இப்படி கூறியவர்கள் இப்போது இந்தியா என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications