கைக்கு எட்டுனது.. டெல்லியில் எடப்பாடிக்கு "நோ" சொன்ன மோடி?.. "மனஸ்தாபம்".. 3 மெகா சந்தேகங்கள்!
சென்னை: டெல்லி சென்று இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.
அதிமுக பாஜக இடையே கடந்த சில வாரங்களாக மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வந்தன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கும் - பாஜகவிற்கும் இடையில் மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வந்தன.

எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனதை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாகவே இவருக்கு பிரதமர் மோடி, அமித் ஷா போன்றார்கள் வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை வருவதை பாஜக விரும்பவில்லை. அதன் காரணமாகவே அவருக்கு எதிராக ஓபிஎஸ்ஸை வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. ஓபிஎஸ் பக்கமே பாஜக உள்ளது.

பாஜக அதிமுக மோதல்
சசிகலாவின் திடீர் எழுச்சிக்கு பின்பும் டெல்லி பாஜகவே இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் வைக்கப்பட்டன. ஏன் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போதும் அவரை தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார். இதனால் இவர்களின் கூட்டணி முறிய போகிறது என்று ஆருடங்கள் சொல்லப்பட்டன. இது போக எடப்பாடி பழனிசாமியை சென்னை வந்த போதும் மோடி தனியாக சந்திக்கவில்லை. அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்களை இந்த பயணம் அதிகப்படுத்தியது.

காங்கிரஸ்
இதெல்லாம் போக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயன்று வருவதாகவும் அரசியல் தரப்பு வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. இப்படி பல விவாதங்கள், அரசியல் கருத்துக்கள் உலவி வரும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுகவில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் பயணமாக இருக்க போகிறது. ஓபிஎஸ் தரப்பு எடப்பாடியின் இந்த பயணத்தை கூர்மையாக கவனித்து வருகிறது. இந்த பயணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

3 கேள்விகள்
இந்த பயணம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் பின்வருமாறு?
கேள்வி 1 - எடப்பாடி டெல்லிக்கு செல்கிறார் என்றால் அவருக்கு பாஜக தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதா?
கேள்வி 2 - எடப்பாடிக்கு எதிராக பாஜக ஏதாவது அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளதா?
கேள்வி 3 - எடப்பாடியின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு ஓ பன்னீர்செல்வம் எப்படி பதிலடி கொடுப்பார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அழைப்பு
இது போக இந்த முறை அவர் டெல்லி செல்ல காரணம்.. டெல்லியில் இருந்தே அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் பாஜக தலைகளிடம் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்துள்ளது என்கிறார்கள். இந்த பயணத்தில் கண்டிப்பாக அவருக்கு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் டெல்லி சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அப்பாயிண்ட்மெண்ட்
அதாவது அமித் ஷாவை சந்திக்க மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு மட்டுமே அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த சந்திப்பு இன்று நடக்கும். மோடியை சந்திக்க இன்னும் நேரம் கொடுக்கப்படவில்லை. அதற்காகவே எடப்பாடி டெல்லியில் மேலும் 2 நாட்கள் தாங்கும் முடிவை எடுத்துள்ளார் . அதற்குள் அப்பாயின்மென்ட் கிடைக்குமா என்று பார்ப்பதற்காக அவர் டெல்லியிலேயே தங்கும் முடிவை எடுத்துள்ளார் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications