திமுகவா? அதிமுகவா? சைலன்ட் மோடிலிருந்து ஆக்சன் மோடிற்கு செல்லும் பாமக.. அன்புமணி அதிரடி பிளான்!
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாமக என்ன விதமான முடிவுகளை எடுக்கும், எப்படி போட்டியிடும் என்று பெரிய கேள்விகள் எழுந்துள்ளது.
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாமக என்ன விதமான முடிவுகளை எடுக்கும், எப்படி போட்டியிடும் என்று பெரிய கேள்விகள் எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகவும் வலுவான கட்சியாக இருந்தது பாமக. திமுகவின் கூட்டணியில் இருந்து பாமக பிரிந்து சம்பவம் இப்போதும் பலருக்கு நினைவு இருக்கலாம்.
அந்த அளவில் திமுக - பாமக பிரிவு பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. வட மாவட்டங்களில் திமுகவிற்கு பெரிய துணையாக ஒரு காலத்தில் பாமக இருந்தது. இந்த நிலையில் பாமகவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் என்னவென்ற பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

பாமக முக்கியம்
இந்த தேர்தலில் பாமக மிக முக்கியமான கட்சியாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இப்போதும் கூட, பாமகவுக்கு வடமாவட்டங்களில் நிறைய வாக்கு வாங்கி இருக்கிறது. வடமாவட்டங்களில் மட்டுமில்லாமல் டெல்டா மாவட்டங்களிலும் பாமாவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பு
இதனால் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக கூட்டணிக்கு செல்லுமா, இல்லை அதிமுக கூட்டணிக்கு செல்லுமா இல்லை இரண்டும் இல்லாமல் சென்ற சட்டமன்ற தேர்தல் போல மூன்றாவது கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. பாமகவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கூட்டணியில் இருக்கும்
பெரும்பாலும் பாமக இந்த தேர்தலில் தனித்து நிற்காது என்றுதான் கூறுகிறார்கள். தனித்து போட்டியிடுவதையும், மூன்றாவது அணி அமைப்பதையும் பாமக விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்கள். இதனால் அதிமுக இல்லை திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

மீண்டும் வருகிறதா
இதனால் திமுக கூட்டணிக்கு இத்தனை வருடங்களுக்கு பின் மீண்டும் பாமக வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணிக்கு பாமக வரும்பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் அதை ஏற்றுக்கொள்ளுமா? இல்லை பழையபடி விடுதலை சிறுத்தைகள், பாமக மீண்டும் நட்பான கட்சிகளாக மாறுமா என்று கேள்வி பிறந்து உள்ளது. பாமக இந்த துணிச்சலான முடிவை எடுக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணி
அதேபோல் பாமக அதிமுக கூட்டணிக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இருப்பதால், பாமகவிற்கு தேவையான இடங்கள் திமுகவில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அப்படி போதுமான இடங்கள் கிடைக்காதபட்சத்தில் பாமக, அதிமுக கூட்டணியை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அன்புமணி திட்டம்
இந்த நிலையில் இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். ஜனவரி இறுதியில் இதுகுறித்து அன்புமணி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்காக அன்புமணி தலைமையில் பெரிய மாநாடு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications