தொங்கு நாடாளுமன்றம் வந்தால்.. இந்தியா கூட்டணியின் பிரதமர் சாய்ஸ் யார்? உள்ளே வரும் தமிழர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தல் எக்சிட் போல் முடிவுகள் எப்படி வந்தாலும் இந்தியா கூட்டணி இன்னமும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறதாம். முக்கியமாக பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளையும் இந்தியா கூட்டணி செய்ய உள்ளதாம்.

2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

Lok Sabha election 2024 BJP Congress 2024

முதல் ஆளாக நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியே இந்தியா கூட்டணி பற்றி அறிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாக வந்தாலும் காங்கிரஸ் கட்சி 295+ இடங்களில் உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முக்கியமாக பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளையும் இந்தியா கூட்டணி செய்ய உள்ளதாம்.

பிரதமர் வேட்பாளர்: இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி வரும் பட்சத்தில் ராகுல் காந்தியைதான் பிரதமராக அறிவிக்க கட்சி முடிவு செய்துள்ளதாம் காங்கிரஸ். என்றால் அவரின் 2 பாரத் ஜோடோ யாத்திரைகள் காரணம். ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காமல் இந்தியா கூட்டணியின் ஆதரவு தேவைப்பட்டாலும் ராகுல் காந்தியை முன்மொழியும் திட்டம் உள்ளதாம்.

ஆனால் இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்க காங்கிரஸ் திட்டமிடுகிறதாம். அப்படிப்பட்ட சமயங்களில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் ஆக முடியாது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி இறங்கி வரமாட்டார் .

ஆம் ஆத்மியும் இதற்கு தயாராக இருக்காது. இப்படிப்பட்ட சமயங்களில் மூன்று பேரை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மனதில் வைத்து இருக்கிறார்களாம். ஒருவர்.. மல்லிகார்ஜுன கார்கே. இவர் தன்மையானவர். இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தலித் பின்னணி கொண்டவர். இதனால் கண்டிப்பாக இவரின் பெயரை காங்கிரஸ் முன்மொழியும் என்கிறார்கள். அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் தேசிய அளவில் இந்திய கூட்டணி சார்பாக முன்மொழியப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதையும் கூட இந்திய கூட்டணியில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரகுராம் ராஜன்: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மன்மோகன் சிங் போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவரையும் காங்கிரஸ் மனதில் வைத்துள்ளதாம். அவர் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன். இவர் தமிழர். தற்போது திமுக தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கிறார்.

இவரை மாற்று கட்சிகள் எதிர்க்க வாய்ப்பே இல்லை. மன்மோகன் சிங் போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய நிலை கொண்டவர். பொருளாதாரம் அறிந்தவர். இதனால் இவரை முன்மொழியும் திட்டமும் காங்கிரஸ் மேலிடத்திற்கு இருக்கிறதாம். ராகுல் காந்திக்கு உள்துறை போன்ற பவர்புல் அமைச்சரவை வழங்கப்படலாம் என்றும் தகவல் வருகின்றன.

ஆனால் இதெல்லாம் இந்தியா கூட்டணி பெறும் இடங்களை பொறுத்தே முடிவாகும். அதே சமயம் இதுவரை பிரதமர் பதவி தொடர்பாக ரகுராம் ராஜனிடம் இந்தியா கூட்டணி அதிகாரபூர்வ ஆலோசனைகளை செய்யவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+