அரசியல் பேசுவதையே நிறுத்த போகிறாரா பாண்டே. வீடியோவை போட்டு.. பங்கமாய் கலாய்க்கும் தவெகவினர்
சென்னை: 234 வேண்டாம்.. 100 வேண்டாம்.. 50 வேண்டாம்.. 30 வேண்டாம்... 10 சீட் ஜெயிக்க சொல்லுங்க தவெகவை.. நான் அரசியலை பேசமாட்டேன் என்று மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த வீடியோவை புக் மார்க் செய்து வைத்திருந்த தவெகவினர். ரங்கராஜ் பாண்டே இனி அரசியல் பேசுவதையே நிறுத்த போகிறாரா என்று பிளாஷ்பேக் வீடியோ போட்டு பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். இது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தமிழக அரசியலில் யாருமே எதிர்பார்க்காத விஷயம் இந்த முறை நடந்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் ஆட்சியைபிடிக்கும் அளவிற்கு வந்துள்ளது. 100க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அநேகமாக அதிமுக உடனோ அல்லது இதர கட்சிகளுடனோ இணைந்து ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பலம் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் சென்னையில் பல இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தன. ஆனால் இந்த முறை அப்படியே தவெக பக்கம் விழுந்துள்ளது.

ரங்கராஜ் பாண்டே வலதுசாரி ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற விமர்சனம் எப்போதும் இருக்கிறது. அவர் தன்னை வெறுப்பேற்றி தவெகவினர் கடுமையாக விமர்சித்து உள்ளார். அந்த வகையில் தான்234 வேண்டாம்.. 100 வேண்டாம்.. 50 வேண்டாம்.. 30 வேண்டாம்... 10 சீட் ஜெயிக்க சொல்லுங்க தவெகவை.. நான் அரசியலை பேசமாட்டேன் என்று மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே ஊடகத்தில் கூறினார்.
அப்போ இனிமே அரசியல் பேச மாட்டார் @RangarajPandeyR னு நம்புவோம்😂😂 pic.twitter.com/q26d2ngm5a
— நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi) May 4, 2026
அப்போ இனிமே அரசியல் பேச மாட்டார் @RangarajPandeyR னு நம்புவோம்😂😂 pic.twitter.com/q26d2ngm5a
— நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi) May 4, 2026
திமுகவை போல் தவெகவினரை கடுமையாக விமர்சித்தவர் தான் ரங்கராஜ் பாண்டே. அவர் அரசியல் பேசுவதையே நிறுத்த போகிறாரா என்று பிளாஷ்பேக் வீடியோ போட்டு பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். இது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனிடையே , அதிமுக உடன் சேர்ந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ரங்கராஜ் பாண்டே மீது தவெகவினர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அவரது கருத்துக்கள் அண்மை காலங்களில் அதிமுகவிற்கு ஆதரவாக இருந்ததாகவும் சில தவெகவினர் விமர்சிக்கிறார்கள். எனினும், அரசியல் பேசுவதையே பாண்டே நிறுத்த போகிறாரா என்று கிண்டல் செய்து தற்போது தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழகம் 102 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.திமுக 70 இடங்களிலும், அதிமுக 62 இடங்களிலும் பிற்பகல் 2மணி நிலவரப்படி முன்னிலை வகிக்கின்றன. பல தொகுதிகளில் வெற்றி வாக்கு வித்தியாசம் 100க்கும் குறைவாகவே இருக்கிறது. போட்டி கடுமையாக இருப்பதால் நொடிக்கு நொடி முடிவுகள் மாறி வருகின்றன.














Click it and Unblock the Notifications