Rich Sam Poor Raj: சமந்தாவின் சொத்து மதிப்பு தெரியுமா? கணவர் ராஜ் நிடிமோருவைவிட அதிக சொத்து?
சென்னை: நடிகை சமந்தா, நடிகர் ராஜ் நிடிமோருவை விட அதிக சொத்துகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. சமந்தாவின் சொத்து மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஈஷா யோக மையத்தின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது.

இந்த நிலையில் சமந்தா, ராஜ் நிடிமோரு ஆகியோரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ராஜை விட சமந்தாவிடம் அதிக சொத்துக்கள் உள்ளன. சமந்தா ஒரு படத்திற்கு ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். மேலும் சில விளம்பரங்கள் மூலமும் ஊதியம் ஈட்டுகிறார்.
அது போல் "புஷ்பா" திரைப்படத்தில் இடம் பெற்ற "ஊ சொல்றியா..." பாடலுக்கு மட்டும் ரூ 5 கோடி சம்பளம் பெற்றாராம். தோல் அழற்சி நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
ஒரு பிரபல நிறுவனத்தின் செல்போனை விளம்பரத்தியதற்கு அவர் ரூ 10 கோடி ஊதியமாக பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அவரது செலவுகள், ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளை கூட்டி கழித்து பார்த்தால் சமந்தாவுக்கு ரூ 100 கோடி முதல் ரூ. 120 கோடி சொத்து இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் அவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளாராம்.
அது போல் ஹைதராபாத், சென்னை, மும்பையில் Sea View வீடுகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ 15 கோடியாம். அது போல் சமந்தாவிடம் பிஎம்டபிள்யூ கார், ஜாக்குவார், ஆடி போன்ற கார்களும் உள்ளனவாம். மேலும் சமந்தா "சாக்கி" எனும் ஒரு பிராண்ட்டில் outfit- களை (டிரஸ்) விற்பனை செய்து வருகிறார்.
அது போல் trulysma பெர்பியூம் என்ற நிறுவனத்தையும் சமந்தா நடத்தி வருகிறார். ஆந்திராவை சேர்ந்தவர் ராஜ் நிடிமோரு. இவர் பிடெக் படித்துள்ளார். அமெரிக்காவில் முதுகலை படிப்பையும் படித்துள்ளார். பின்னர் திரைத்துறையின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக வெப் சீரிஸ் இயக்கினார். இவரது சொத்து மதிப்பு ரூ 80 முதல் 85 கோடி வரை என சொல்லப்படுகிறது. இருவரது சொத்து விவகாரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனவே சமந்தா, ராஜை விட அதிக சொத்துகளை வைத்திருக்கிறார். சமந்தா, நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றது போல் ராஜும் மனைவி ஷியாமிலியிடம் இருந்து 2022 ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications