பாஜக மாநில தலைவராகிறாரா சரத்குமார்.. செய்தியாளர் கேள்விக்கு சூசக பதில்.. நயினார் அப்செட்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தவெக ஆட்சியை பிடித்து திமுக எதிர்க்கட்சியானது. அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. பாஜகவில் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிவிட்டனர். எல் முருகன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி அரசியலுக்குள் வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படுமா என்கிற கேள்விக்கு சரத்குமார் சொன்ன பதில் கவனம் ஈர்த்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நடிகரும், பாஜக நிர்வாகி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு பாஜக மாநில தலைவர் பதவி கொடுப்பதாக செய்தியை பத்திரிகையில் தான் பார்க்கிறேன். நான் நிச்சயமாக தலைவர் பதவியில் இருக்க வேண்டுமென யாராவது சொன்னால் அதைப்பற்றி யோசிக்கிறேன். தவெக அரசு 6 மாதங்களுக்கு அவகாசம் கேட்டுள்ளனர். இப்போது அவர்கள் ஹனிமூன் பீரியடில் உள்ளனர். நிர்வாகத்தில் என்ன நடக்கிறது, எப்படி செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு முன்னோட்டம்
இப்போது அதைப்பற்றி கருத்து சொல்ல வேண்டிய இடத்தில் இல்லை. நான் மத்திய அமைச்சர், மாநில தலைவர் உள்ளிட்ட ஏதாவது பொறுப்பில் இருந்தால் அரசு பற்றி கருத்து சொல்லலாம். அந்தளவுக்கு ஆழமாக நான் இவர்களை பார்க்கவில்லை. புதிதாக வந்துள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர். அரசியலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில் நிற்கவுள்ளனர்.
முதலமைச்சராக விஜயிடம் யாரும் நேராக சென்று பார்க்கவில்லையே. அவர் நிகழ்ச்சிக்கு போகிறார், வருகிறார் அவ்வளவு தான். எதிர்பாராதளவு மழை பெய்யும்போது எந்த அரசாலும் உடனடியாக சரி செய்ய முடியாது. திமுக ஆட்சியில் ரூ.4,000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணி செய்தும் குறையவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. மழைநீர் தேங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. எல்நினோ, சீதோட்சண நிலையால் அதிகமழை பெய்கிறது என்கிறார்கள். புவி வெப்பமயமாதல் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
தவெக எப்படி
அதை இப்போதைக்கு ரியாலிட்டிக்கு வந்துவிட்டது. எதையும் திட்டத்துடன் செயல்பட வேண்டும். பணவீக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பத்திரிகையில் தான் பார்க்கிறோம். தமிழகத்தில் பெரியளவுக்கு கலவரம் எல்லாம் நடக்காது. எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது. கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு எந்த ஆட்சியையும் குறை சொல்ல முடியாது" என்றார். இதனால் தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அப்செட் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications
