ட்விஸ்ட்.. உக்கிரம் அடைந்த வெயில்.. தமிழக பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகிறதா? அரசின் முடிவு என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடன் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார்.
கடந்த வார தொடக்கத்தில் அவர் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை செய்தார். அதன்பின் மீண்டும் தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பின் பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.
இந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறி இருந்தார் . இந்த நிலையில்தான் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 7ம் தேதி பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்த நிலையில் அந்த தேதி உறுதி செய்யப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படும் முன் கோடை வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கோடை வெயில்: ஆனால் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் பகல் நேரங்களில் 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கூட பல இடங்களில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் வெப்பநிலை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடன் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். மீண்டும் அவர் ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறப்பை தள்ளி போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications