போச்சே! அதிமுக இன்றியே விக்கிரவாண்டியில் செம வாக்கு பதிவு! மாற்றாக வந்த சீமான்? நம்பர் சொல்வது என்ன?
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நேற்று பதிவான அதிக வாக்குகள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் வேகமாக வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றாகும். உதாரணமாக 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.

நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுத்தது. இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் 7.9 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சியின் சின்னம் போன நிலையிலும் இந்த வாக்குகள் கிடைத்தது.
கரும்பு விவசாயி சின்னம் பறிபோனாலும் கூட அந்த கட்சி தனியாக நின்று மைக் சின்னத்தில் இத்தனை வாக்குகளை பெற்றது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி வாக்குகள் 3 ஆக பிரிந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு திமுக எதிர்ப்பு வாக்குகள் எவ்வளவு செல்லவும் என்று தெரியவில்லை.
விக்கிரவாண்டி தேர்தல்; இப்படிப்பட்ட நிலையில்தான் விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. நேற்று நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது
இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைபடாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே சராசரியாக 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். இந்த முறை அதை தாண்டி கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பதிவாகி உள்ளது.
இதில் திமுகவிற்கு பாரம்பரியமாக செல்லும் 46-50 சதவிகிதம் சென்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள வாக்குகள் அதிமுக இல்லாமல் பாமக, நாம் தமிழருக்கு சென்று இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு மேலும் 10 சதவிகிதம் வாக்குகள் வந்தாலும் கூட.. 60 சதவிகிதத்தை திமுக எடுத்தாலும் கூட மீதம் உள்ள 20 சதவிகிதத்தை பாமக, நாம் தமிழர் பகிர்ந்து கொள்ளும்.
சீமானுக்கு சான்ஸ்: இந்த தேர்தலில் மும்முனை போட்டி மட்டும் உள்ளது. அதிமுக களத்தில் இல்லை. இப்படி இருக்க திமுக எதிர்ப்பு வாக்குகள் சீமானுக்கு வந்தால் அது அரசியல் ரீதியாக அவருக்கு எழுச்சியாக இருக்கும்.
கள்ளக்குறிச்சி நிலவரம்: இதில் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உள்ளே நாம் தமிழர் 3ம் இடம் பிடித்தது.
2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது.
போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நாம் தமிழர் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது.
அப்படி இருக்க இந்த தேர்தலும் சீமானுக்கு பெரிய சான்சாக மாறி உள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications