சேகர்பாபு மெகா அறிவிப்பு வெளியிடுகிறாரா?.. இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம்
இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடக்கிறது
சென்னை: 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு, சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.. இன்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.. இதில், ஒவ்வொரு நாளும் அரசுத்துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது விவாதிக்கப்பட்டும் வந்தது.
ஏப்ரல் 29-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை இடம்பெற்றது... அதன்பின்னர், அரசு விடுமுறை வந்ததால் சட்டசபைக்கு 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருந்தது...

விடுமுறை
நேற்றைய தினம் அனைத்து விடுமுறைகளும் முடிந்த நிலையில், இன்று சட்டசபை மறுபடியும் கூடுகிறது... இதனால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.. இன்றைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது..

எதிர்பார்ப்புகள்
இதில், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீது எம்எல்ஏக்கள் பேச உள்ளனர்... உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பேசுகிறார்கள்.. கடைசியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் இவர்கள் 2 பேரும் வெளியிடுகின்றனர்... அந்த வகையில் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.

மனிதவளம்
வரும் 6-ந்தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7ந் தேதி திட்டம், வளர்ச்சி, பொதுசிறப்பு திட்ட செயலாக்கம் நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது... அதேபோல, மே 9, 10 ஆகிய 2 நாட்களில் முதல்வரின் துறையான போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தீயணைப்பு துறை, மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்தும் இதில் இடம் பெறுகிறது.

போலீஸ் துறை
போலீஸ் மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளிப்பார்.. எனினும், முதல்வரின் துறை என்பதால், அன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன குறைகளை சுட்டிக்காட்டி பேசுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப இப்போதே பதில்களும் தரவுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications