செல்வப்பெருந்தகை திமுகவில் இணைகிறாரா? அந்த 1 முக்கிய லாபம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்
சென்னை: காங்கிரஸ்-திமுக கூட்டணிக்குள் புதிய அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து பரவும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது சாத்தியமா? இதனால் யாருக்கு நன்மை கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், தேர்தல் பரபரப்புக்கு நடுவில் இப்படியொரு செய்தி பரபரத்து வருகிறது. இதுகுறித்த பிரத்யேக தகவல்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என ராகுல் காந்தியை ஸ்டாலினும், தனது சகோதரர் ஸ்டாலின் என ராகுல் காந்தியும் மாறி மாறி பாச மழை பொழிந்து வந்த நிலை மாறி இப்போது தமிழகத்தின் பக்கம் பாராமுகமாய் இருந்து வருகிறார் ராகுல் காந்தி.

தமிழகத்தையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் விட்டு ராகுல் காந்தி விலகிப் போனதற்கு செல்வ பெருந்தகைதான் காரணம் என பலரும் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் தேர்தலுக்குப் பிறகு செல்வப் பெருந்தகை திமுகவில் இணையே இருப்பதாக வெளிவரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பேச்சு வார்த்தைகள் தொடங்கியதில் இருந்தே ராகுல் காந்தி தமிழக அரசியலில் நேரடியாக ஆர்வம் காட்டவில்லை.
செல்வப்பெருந்தகை திமுகவில்?
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள எதிர்கொள்ளும் நோக்கத்தில் இருந்ததாகவும், ஆனால் ராகுலின் விருப்பத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திமுகவுடன் கூட்டணியை தொடர முயற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் திமுகவுடன் கூட்டணி தொடர ராகுல் காந்தியை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக செல்வப் பெருந்தகை அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
செல்வப் பெருந்தகை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை திமுகவின் கிளைக் கழகமாகவே மாற்றி உள்ளார் என ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலகட்ட தலைவர்களும் வெளிப்படையாகவே பேசி வருவதும் ராகுல் காந்தியின் என்ன ஓட்டத்தையே பிரதிபலிப்பது போல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியால் தான் ராகுல் காந்தி இதுவரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வருவதற்கு முனைப்பு காட்டவில்லையாம்.
திமுகவுக்கு கூடுதல் பலம்
ஒருவேளை செல்வப்பெருந்தகை திமுகவில் இணைந்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பலவீனமாக அமையலாம்.. ஆனால், திமுக ஏற்கனவே வலுவாக இருப்பதால் செல்வப் பெருந்தகையின் வருகை அவர்களுக்கு பெரிய பாதிப்பையோ அல்லது கூடுதல் பலத்தையோ தந்துவிடப் போவதில்லை..
அதேசமயம், செல்வப் பெருந்தகை திமுகவில் இணைவது அவருக்கு ஒரு பாதுகாப்பான அரசியல் புகலிடத்தைத் தரக்கூடும் என்றாலும், திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் இதனை எப்படி ஏற்பார்கள் என்பது கேள்விக்குறியே..
யாருக்கு லாபம்
ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரைத் தன்வசம் இழுப்பது திமுகவிற்கு மற்ற கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவிதமான அவநம்பிக்கையை உருவாக்க வாய்ப்புள்ளது..
இது அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.. குறிப்பாக, ராகுல் காந்தியின் அதிருப்தி நீடித்தால் தேசிய அளவில் இருக்கும் இணக்கமான சூழல் தமிழகத்தில் காணாமல் போகும்.. இதனால் தேர்தல் களத்தில் வாக்குகள் சிதறுவதற்கும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதால், இந்த மாற்றம் திமுகவிற்கு சாதகத்தை விட சவால்களையே அதிகம் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- சிறப்பு நிருபர்
-
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications