விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?
சென்னை: எடப்பாடியின் எதேச்சிகாரத்தை எதிர்த்து தான் அதிமுகவில் இருந்து வெளியில் வந்தார் செங்கோட்டையன். தனது நீண்ட அரசியல் அனுபவத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் தவெகவில் இணைய முடிவெடுத்தார் அவர். ஆனால் அந்த இரண்டிற்கும் இப்போது ஆப்பு விழுந்து விடுமோ என அப்செட்டில் இருக்கிறாராம் செங்கோட்டையன்.
எம்ஜிஆர் அதிமுகவை 1972-ல் தொடங்கியதில் இருந்து அந்த கட்சியில் இருப்பவர். எம்ஜிஆரின் குட்புக்கில் இருந்தவர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம் பெற்றவர். ஒரு முறை சத்தியமங்கலத்தில் இருந்தும், எட்டுமுறை கோபிச்செட்டிபாளையத்தில் இருந்தும் என 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பல முறை அமைச்சராகவும் இருந்தவர். மூன்று தலைமுறை அரசியல்வாதிகளை பார்த்தவர்.

இவ்வளவு அரசியல் பின்புலத்தை கொண்டவர் தான் கே.ஏ.செங்கோட்டையன். ஆனால், தவெகவில் அடைக்கலமான பிறகு இப்போது என்ன செய்வது என்பது தெரியாமல் செங்கோட்டையன் குழப்பத்தில் இருக்கிறாராம்.
செங்கோட்டையனும் எடப்பாடியும் ஒரே (கவுண்டர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், என்ன காரணமோ தெரியவில்லை இருவருக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்தது. எம்ஜிஆரிடம் அரசியல் பயின்ற தனக்கான அங்கீகாரத்தை எடப்பாடி கொடுக்கவில்லை என செங்கோட்டையன் ஆதங்கப்பட்ட நேரத்தில், செங்கோட்டையனை வளரவிட்டால் தனக்கு பேக்ஃயராகிவிடும் என எடப்பாடி பயந்தது தான் இருவருக்குமான பிணக்கு ஏற்பட்ட ஆரம்ப புள்ளி.
அந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி அதிமுகவை விட்டே வெளியில் வரும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் செங்கோட்டையன். அப்போது அவருக்கு புகலிடமாக தெரிந்தது தவெக. தனது அரசியல் அனுபவத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்பி தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். ஆனால், அவருக்கு தவெகவில் மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா என இருவரையும் தாண்டி அவரால் அங்கு ஒன்றமே செய்ய முடியவில்லை. இந்த மனப்புழுக்கத்தில் செங்கோட்டையன் இருக்கும் நேரத்தில் மற்றொரு குண்டு வெடிக்க காத்திருக்கிறது. அது தான் தவெக-என்டிஏ கூட்டணி.
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்
பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணியில் இணைய கிட்டத்தட்ட விஜய் தயாராகிவிட்டதாக(வேறு வழியில்லை என்பதால்) செங்கோட்டையன் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாம். எடப்பாடியை எதிர்க்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு விஜயுடன் கைகோர்த்த தனக்கு, எங்கே மீண்டும் எடப்பாடி முன்னால் மீண்டும் கைகட்டி நிற்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என வருத்தப்படுகிறாராம் செங்கோட்டையன்.
அதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்ற காமெடியை போல, அதற்கு பேசாமல் அதிமுகவிலேயே இருந்திருக்கலாமோ எனவும் செங்கோட்டையன் நொந்து போயிருக்கிறாராம். ஒருவேளை என்டிஏ கூட்டணியில் இணைந்து அதிமுகவுடன் பயணிக்க விஜய் முடிவு செய்து விட்டால், தவகெவில் இருந்து வெளியேறலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறாராம் செங்கோட்டையன். அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டால் செங்கோட்டையனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.
செங்கோட்டையன் நிலைமை இன்னும் மோசம்
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல, அரசியல்செய்த செங்கோட்டையன் சும்மாவா இருப்பார். தன்னை மதிக்காத எடப்பாடிக்கும், தன்னை நம்பி ஏமாற்றிய விஜய்க்கும் ஒருசேர ஷாக் கொடுக்கும் விதமாக அவர் ஓபிஎஸ் பாணியில் திமுகவில் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் செங்கோட்டையனின் மனதை நன்கறிந்தவர்கள். எது எப்படியோ?.... விஜய் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியல் களத்தில் ஒரு ஜெர்க்கை ஏற்படுத்தப் போகிறது என்பது தான் உண்மை.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications