Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த "இளைய தளபதி" சிவகார்த்திகேயனா? கொளுத்திப்போட்ட அந்தணன் - அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா?

“மாவீரன் படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ இந்த மூன்று மட்டுமே கிட்டத்தட்ட ரூ.63 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது.”

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? என்பது போய் விஜய் ரசிகர்கள் அந்த பட்டத்தை வாரிசு திரைப்பட வெளியிட்டின்போது பயன்படுத்தவே தொடங்கிவிட்ட நிலையில், பல ஆண்டுகளாக விஜய்யின் பெயருக்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த பட்டமான இளைய தளபதி பட்டத்தை சிவகார்த்திகேயனுக்கு வழங்குவது குறித்து பேசியுள்ளார் சினிமா பத்திரிகையாளர் அந்தணன்.

டாக்டர், டான் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த பிரின்ஸ் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் திரைப்படம்

மாவீரன் திரைப்படம்

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார். அதில், "மாவீரன் படப்பிடிப்பு ஒரே இழுபறியாக நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு நடந்தது. அப்படியே போய்கொண்டே இருந்தார்கள்.

நிறைவடையும் படப்பிடிப்பு

நிறைவடையும் படப்பிடிப்பு

கடைசியாக ஒரு நல்ல செய்தி, 21 ஆம் தேதியுடன் படப்பிடிப்பு முடியுது. இந்த படம் பக்ரீத் பண்டிகை அன்று வெளியிடப்படுகிறது. இப்போதில் இருந்தே படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகளை ரொம்ப ரொம்ப வேகமாக கொண்டு செல்கிறார்கள். படப்பிடிப்பில் சலசலப்புகள் வரலாம். அதுபாட்டுக்கு வேகமாக சென்றுவிடும்" என்றார்.

போஸ்ட் புரொடெக்சன்

போஸ்ட் புரொடெக்சன்

அப்போது பேசிய பத்திரிகையாளர் பிஸ்மி, "படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் இடையிடையே கட்டையை போடுகிறார் என்று முன்பே சொன்னோம். அதையும் தாண்டி சுமூகமாக போகவேண்டும்." என்றார். அப்போது அந்தணன், "எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் வைத்துவிடாதீர்கள்." என்று தெரிவித்தார்.

ரூ.63 கோடி வியாபாரம்

ரூ.63 கோடி வியாபாரம்

தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்து பேசிய பிஸ்மி, "இதற்கு இடையில் படத்தின் வியாபாரம் சிறப்பாக போய்கொண்டு இருக்கிறது. மாவீரன் படத்தினுடைய பட்ஜெட் என்பது 18 கோடிதானாம். ஆனால், இந்த சேட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ இந்த மூன்று மட்டுமே கிட்டத்தட்ட ரூ.63 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. இதற்கு மேல் தமிழ்நாடு திரையரங்கம், வெளிநாட்டு திரையரங்குகள், இந்தி உரிமம் எல்லாம் எங்கேயோ போய்விடும்." என்றார்.

அடுத்த இளைய தளபதியா?

அடுத்த இளைய தளபதியா?

அப்போது குறுக்கிட்ட அந்தணன், "அவருதான் இளைய தளபதியா என்ன?" என்று கேட்க பிஸ்மி அது தெரியாது என்கிறார். "சேட்டிலைட் சேனலில் சிவகார்த்திகேயன் படங்களை போடும்போது டிஆர்பி ரேட்டிங் பலமாக வருமாம். விஷால் படம் போடும்போதும் பலமாக வருமாம்." என்று பிஸ்மி சொல்ல, அந்தணனோ, "நான் அவரை வேறு ஒரு ரேஞ்சுக்கு யோசிக்கிறேன். திடீர்னு இங்கு போட்டுட்டீங்களே" என்றார்.

சிவகார்த்திகேயனுக்கு நிரந்தர பிசினஸ்

சிவகார்த்திகேயனுக்கு நிரந்தர பிசினஸ்

தொடர்ந்து பேசிய பிஸ்மி, "இதில் முக்கிய தகவல் என்னவென்றால் மாவீரன் படத்திலேயே சிவகார்த்திகேயனும் மறைமுக தயாரிப்பாளர் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் அவருக்கான வருவாய் மாவீரனில் பெரிய தொகைதான்." என்றார். அப்போது அந்தணன், "இவ்வளவும் இந்த பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு நடக்கிறது என்பதுதான் பெரிய ஆச்சரியம். அப்படியென்றால் அவருக்கு என்று நிரந்தமான பிசினஸ் உள்ளது." என்றார்.

இளைய தளபதி விஜய்

இளைய தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக தற்போது திகழ்ந்து வரும் விஜய், மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். அவரது படம் சூப்பராக இருந்தாலும், சுமாராக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவால் வசூலில் சாதனை படைத்துவிடுகிறது. தொடக்கத்தில் இளைய தளபதி என்ற பெயரை அவர்தான் பயன்படுத்தினார். அதன் பின்னர் தளபதி என்று அழைக்கப்பட்டார். இப்போது அடுத்த சூப்பர் ஸ்டார், தலைவர் என்றும் அவரை ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+