கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கொடைக்கானலில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த சபரீசனின் ரகசிய ரிப்போர்ட் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு என தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறார்.. ராசியான இடத்தில் அமர்ந்து அவர் எடுக்கும் இந்த முடிவுகள், தற்போதைய அமைச்சர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்போகிறதா அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறதா என்கிற பரபரப்பு அதிகரித்துள்ளது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஒருவழியாக அமைதியடைந்திருக்கிறது.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அரசியல் கட்சிகளின் கவனம் எல்லாம் தேர்தல் முடிவுகளை நோக்கியே இருக்கிறது.

Stalin

ஆளும் திமுக - பெரிய அரசியல் மாற்றம்

ஆனால், ஆளும் தரப்பான திமுகவில் அடுத்தகட்ட நகர்வுகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினின் கொடைக்கானல் பயணம் சாதாரண ஓய்வுக்காக மட்டுமல்ல, அது ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..

தேர்தல் பணிகள் முடிந்து வாக்குப்பதிவு முடிந்த கையோடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.. அவர் அங்கு தனது தனிப்பட்ட ஓய்வை கழித்து வரும் நிலையில், மறுபுறம் முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இரண்டு பயணங்களும் "ஓய்வு" என்று சொல்லப்பட்டாலும், அரசியல் வட்டாரங்களுக்கு நன்றாகவே தெரியும் - இந்த நேரத்தில் எந்த முடிவும் "வெறும் ஓய்வு" அல்ல.

கொடைக்கானலில் ஸ்டாலின் ரெஸ்ட்

சித்தரஞ்சன் சாலைக்கு நெருக்கமானவர்கள் சொல்லும் தகவல்படி, கொடைக்கானல் என்பது முதல்வருக்கு மிகவும் ராசியான இடமாகும்.. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, முதல்வர் இதேபோல கொடைக்கானலுக்குத்தான் சென்றிருந்தார்.. அந்தத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.. அதே சென்டிமென்ட் தற்போதும் தொடர வேண்டும் என்பதற்காகவே அவர் மலைகளின் இளவரசியைத் தேர்வு செய்துள்ளாராம்..

கொடைக்கானலில் முதல்வர் தங்கும் இந்த 4 நாட்கள் ஓய்வுக்காக ஒதுக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டாலும், அங்கேதான் தமிழகத்தின் அடுத்த அமைச்சரவைக்கான "தோராய பட்டியல்" தயாராகப் போகிறது என்பதுதான் தற்போதைய எக்ஸ்க்ளூசிவ் தகவல்..

அமைச்சரவையில் மாற்றம்

தற்போதைய அமைச்சரவையில் முதல்வர் உட்பட 34 அமைச்சர்கள் உள்ளனர்.. இதில் 32 அமைச்சர்கள் இந்த முறை தேர்தல் களத்தில் நேரடியாகப் போட்டியிட்டனர்..

இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றாலும், தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் சிலரை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.. கடந்த கால செயல்பாடுகள், மக்கள் மத்தியில் அமைச்சர்கள் மீதான நற்பெயர் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

சீக்ரெட் அசைன்மென்ட்?

இந்த அதிரடி முடிவுக்கு வலு சேர்க்கும் வகையில், முதல்வர் ஒரு ரகசிய அசைன்மென்ட்டையும் கொடுத்துள்ளார்.. களத்தில் நின்ற 32 அமைச்சர்களில் எத்தனை பேர் உறுதியாக வெற்றி பெறுவார்கள், யாருடைய வெற்றி வாய்ப்பு இழுபறியில் இருக்கிறது, யாருடைய தொகுதிகளில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது என்பது குறித்த துல்லியமான ரிப்போர்ட்டைத் தயாரிக்கும்படி தனது மருமகன் சபரீசனிடம் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

அந்த ரிப்போர்ட் கையில் கிடைத்தவுடன், அமைச்சரவை மாற்றத்திற்கான இறுதி முடிவை முதல்வர் எடுக்கவுள்ளார்.. வெற்றி பெற்று வந்தாலும் சில மூத்த அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படலாம் என்றும், அவர்களுக்குப் பதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

ஸ்டாலின் மாஸ்டர் பிளான்

குறிப்பாக, இளைஞர் அணிக்கும், கட்சியின் விசுவாசமான இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளாராம்.. கொடைக்கானலின் குளிரில் அமர்ந்து முதல்வர் தயாரிக்கும் இந்த லிஸ்ட், சென்னை திரும்பியதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை..

ஆக, இந்த கொடைக்கானல் பயணம் என்பது ஒரு சென்டிமென்ட் மட்டுமல்ல, தமிழக அரசின் நிர்வாகத்தைச் சீரமைக்கப் போகும் ஒரு முக்கியத் திட்டமிடலாகும்.. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, இந்த 'கொடைக்கானல் மேஜிக்' எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்பது தெரிந்துவிடும்.. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையும் புதிய அமைச்சரவை, புத்துணர்ச்சியுடனும் புதிய முகங்களுடனும் இருக்கும் என்பதே தற்போதைய அரசியல் நிலவரம்..!!

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+