அல்லாடும் செந்தில் பாலாஜி.. நீதிபதி சொல்லால் நெளியுது திமுக? ஸ்டாலினுக்கு போன்.. "அவர் நொந்துடுவாரே"
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.. என்ன அது?
செந்தில் பாலாஜி வழக்கை பொறுத்தவரை, திமுக அமைதி காத்து வருகிறது.. அரசு மீதான எந்தவகையான சர்ச்சைகளும் வந்துவிடக்கூடாது என்பதிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.
அதனால்தான், ஆளுநர் ரவி, இந்த விவகாரத்தை அன்று கிளப்பியபோதே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா? என்று திமுக மேலிடம் யோசித்ததாம்.. இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பே விவாதித்திருக்கிறார்.. க

கைது நடவடிக்கை: அதேபோல, செந்தில்பாலாஜியை பொறுத்தவரை, முதல்வரின் சங்கடத்தை, கைது நடவடிக்கையின்போதே நன்கு உணர்ந்திருந்தாராம்.. சிகிச்சைகள் முடிந்து, செந்தில் பாலாஜியை புழலுக்கு கொண்டுசெல்லப்பட்ட தினத்தன்று, சிறைத்துறை அதிகாரிகளிடமும் செந்தில் பாலாஜி பேசியிருக்கிறார்..
"என்னை மையப்படுத்தி தலைவருக்கு (ஸ்டாலின்) ஏற்படும் சங்கடங்கள் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.. ஏற்கனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருக்கிறேன். அதை தலைவர் ஏற்க வேண்டும்.. தேவைப்பட்டால் கடிதம் கூட எழுதுகிறேன்" என்று சிறைத்துறை அதிகாரிகள் மூலம் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியிருந்தாராம் செந்தில் பாலாஜி..
செந்தில் பாலாஜி: அந்தவகையில், ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை தருவதற்கு முன்னேயே, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜி தன்னை தானே விடுவித்து கொள்வார் என்று தகவல்கள் பரபரத்தன.. இப்போது, நீதிமன்றமே இதுகுறித்து கேள்வி எழுப்பிய துவங்கிவிட்டது.
செந்தில்பாலாஜி மீதான வழக்கின் விசாரணையின்போது, 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவரை, அமைச்சராக வைத்திருப்பதன் மூலம், மக்களுக்கு என்ன சொல்லவருகிறது அரசு ? என்று சமீபத்தில் கமெண்ட் பாஸ் பண்ணியிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். நீதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியது, ஸ்பெயினில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
அரசு வழக்கறிஞர்கள்: இதனையடுத்து, அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை தொடர்புகொண்டு, இதுகுறித்து ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதேபோல, குற்றவியல் அரசு வழக்கறிஞர்களிடமும் விவாதித்துள்ளார் ஸ்டாலின்.
"பொதுவான கருத்தாக நீதிமன்றங்கள் அரசை பார்த்து இப்படி கேள்வி கேட்பது புதிதல்ல, அதைப்பற்றி சீரியஸ் காட்டிக் கொள்ள வேண்டாம். ஆனாலும், சிறையில் இருப்பவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டிய அவசியம் எதற்கு? என்று பொதுவெளியில் விமர்சனங்கள் இருக்கிறது. இதை வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும் அதிமுகவும் நம் ஆட்சியை நோக்கி விமர்சனம் வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது " என்று மட்டும் பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
ஜாமீன்: அதற்கு முதல்வர், "எனக்கும் புரிகிறது. ஆனால், 7 மாதங்களாகியும் ஜாமீன் கிடைக்காத வருத்தத்தில் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் கேபினெட்டில் இருந்து தூக்கினால் கட்சி நம்மை கைவிட்டுவிட்டது என அவர் மன உளைச்சல்களுக்கு ஆளாவார். அதான் பார்க்கிறேன்" என ஆதங்கப்பட்டு சொன்னாராம் ஸ்டாலின்.
இந்த விசயம்தான் தற்போது திமுக வழக்கறிஞர்களிடம் எதிரொலிக்கிறது. இந்த விஷயம் செந்தில்பாலாஜிக்கு தெரியவர, "கேபினெட்டில் இருந்து என்னை எடுத்து விடுங்கள் என ஏற்கனவே முதல்வரிடம் சொல்லியிருக்கிறேன். அதை அவர் செய்ய வேண்டும்" என்று மறுபடியும் தகவல் தந்துள்ளாராம் செந்தில்பாலாஜி.
இருதலைக்கொள்ளி: செந்தில் பாலாஜி விஷயத்தில், திமுகவை முழுமையாக கண்டிக்கவும் முடியாமல், பாஜகவை ஆதரிக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளியாய் அதிமுக உள்ளதாக தெரிகிறது. ஆனால், அதேசமயம், செந்தில்பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும்பட்சத்தில், பாஜக இதனை தன்னுடைய சாதனையாகவே நெஞ்சுயர்த்தி பேசும் என்பதிலும் சந்தேகமில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications