வலுத்துள்ளது.. ஆனால், பழுக்கவில்லை.. ஸ்டாலின் என்ன இப்படி சொல்லிட்டாராமே.. அப்போ உதயநிதி?
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரிக்கை வலுத்துள்ளதே என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டதற்கு, ’’வலுத்துள்ளது ; ஆனால், பழுக்கவில்லை’’ என்று சொல்லிவிட்டுப் போனார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க ஸ்டாலினுக்கு இப்போதைக்கு விருப்பமில்லை என எதிர்க்கட்சிகள் பரப்பினாலும், திமுக இளைஞரணியினர் நம்பிக்கை இழக்கவில்லை.
பழம் பழுப்பதற்கு நீண்ட நாட்கள் எல்லாம் தேவைப்படாது. மரத்திலே பழுக்க வேண்டுமானாலும், பழத்தை பறித்து வீட்டிலே வைத்திருந்து பழுக்க வைத்தா லும் அதிகப்பட்சம் 1 வாரம் போதுமானது. அதனால், துணை முதல்வர் பழம் விரைவில் பழுக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்லும் திமுக இளைஞரணி யினர், ’’ தற்போது ஆடி மாதம் நடக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 16-ந்தேதியோடு ஆடி மாதம் முடிகிறது. 17-ந்தேதி ஆவணி தொடங்குகிறது. அப்போது துணை முதல்வர் அறிவிப்பு வரவிருக்கிறது. அதனால் பழம் பழுக்க இன்னும் 1 வாரம் தான் இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, 13-ந்தேதி கூடும் அமைச்சரவை யில், துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் மாற்றம் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவிருக்கிறது’’ என்கிறார்கள் இளைஞரணி யினர்.
அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட முக்கிய முடிவுகள் விவாதிக்க ப்படவிருக்கும் நிலையில், தொழில்த்துறை சார்ந்த சில திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதுவும் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றும் தகவல்கள் கிடைக்கின்றன
அமைச்சரவை மாற்றம்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 13ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. முன்னதாக தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதிதான் நடந்தது. அதன்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் அடுத்த வாரம் மீண்டும் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்திற்கு முன்னதாக பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
அமைச்சரவை மாற்றம்: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து துறை, மின்சார, அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .












Click it and Unblock the Notifications