நடிகை கஸ்தூரிக்கு வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்.. எழும்பூர் கோர்ட் நீதிபதி உத்தரவு!
சென்னை: தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி நேற்று ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி இன்று நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். நவம்பர் 29 வரை கஸ்தூரியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தலைமுறைவாகி இருந்தார். அவரை பிடிக்க இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு அவர் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், "300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?'' என்று பேசியிருந்தார்.
முன்னதாக நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும் என்று குறிப்பிட்டார். கஸ்தூரி பேசிய காணொளி நீதிபதி முன்பு ஒளிபரப்பப்பட்டது.
அரசுத்தரப்பு: கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். முன் ஜாமின் வழங்கக்கூடாது
நீதிபதி: எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?
அரசுத்தரப்பு: 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
கஸ்தூரி தரப்பு: குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு மட்டும் அந்த கூட்டம் நடக்கவில்லை.
தொடர்ந்து கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி: குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு ஏன் கஸ்தூரி கூறினார்? அதற்கான அவசியம் என்ன?
கஸ்தூரி தரப்பு: தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதற்காக காவல்துறை அவரை தேடத் தேவையில்லை
அரசுத்தரப்பு: கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர் இப்படி எல்லாம் கூறி உள்ளார்.
நீதிபதி: அவர் பேசியது தேவையற்றது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறும் மனுதாரர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்?
அந்த வீடியோக்களை பிறர் பார்க்கையில் தேவையற்ற விளைவை ஏற்படுத்தும்தானே?. மன்னிப்பை உணர்ந்து கேட்டதாக தெரியவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாகவே உள்ளது
அரசுத்தரப்பு: கஸ்தூரி சாதாரணமாக பேசவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு இடையே பிரிவினையையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். பிரச்சனை ஏற்படுத்த வேண்டும்.. சதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி எல்லாம் பேசி உள்ளார்.
கைது: தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி நேற்று ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.
கஸ்தூரியை சென்னைக்கு தனிப்படை போலீசார், காரில் அழைத்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் தகுதி சான்றிதழ் பெறப்பட்டது.
நீதிமன்றக் காவல்: அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தி நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர் செய்யப்பட்டார் கஸ்தூரி. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரியை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications