சின்ன தாமரை கண்ணில் பூத்ததே.. பாஜக - விஜய் இடையே "ப்ரோமான்ஸ்".. எதிர்பார்க்காத ட்விஸ்ட் வருது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் விஜய் - பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற வாதங்கள் கடந்த சில நாட்களாக வைக்கப்படுகின்றன. அதிலும் கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின் இந்த வாதங்கள் அதிகரித்து உள்ளன.

இது தொடர்பாக நடக்கும் வாதங்கள் என்னென்ன.. உண்மையில் பாஜக - விஜய் கூட்டணி உருவாகிறதா? திரைமறைவில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் என்னென்ன? என்று இங்கே பார்க்கலாம்.

TVK Vijay

1. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விஜய்யின் தவெக கட்சியினர் தமிழக அரசின் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் SIT அமைத்ததை எதிர்த்தனர். இந்த நிலையில்தான் சிபிஐ அறிவிப்பை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அரசியல் ரீதியாக விஜய்க்கு இது நெருக்கடியை கொடுக்கும். முக்கியமாக டெல்லி கட்டுப்பாட்டில் அதிகார ரீதியாக அவர் வர வேண்டி இருக்கும் .

2. இந்த நெருக்கடி காரணமாக விஜய் அரசியல் சமரசங்களை செய்ய வேண்டி இருக்கும். அதாவது பல அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் காரணமாக அரசியல் தலைவர்கள் பாஜகவுடன் நெருக்கம் ஆகி உள்ளனர். அதே பிரஷர் விஜய்க்கும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

3. விஜய் மீது ஏற்கனவே வருமான வரித்துறை வழக்கு உள்ளது. வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கும் விஜய்க்கு நெருக்கடியை கொடுக்கும்.

4. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.

5. மாநிலத்தின் அரசியல் நிலைமைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த பாஜக தலைவர் ஒருவர், "தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் வேறுபட்டது. கடந்த காலத்தில் அதிமுகவிற்கு ஒரு கவர்ச்சியான தலைமை இருந்தது. அது மறைந்த விஜயகாந்தின் தேமுதிக போன்ற ஒரு மூன்றாவது கட்சியின் எழுச்சியை மறைத்தது. ஆனால், இப்போது கட்சியை ஒன்றிணைக்க எந்த மக்கள் செல்வாக்குமிக்க தலைவரும் இல்லை. இதனால் விஜய் போன்ற ஒருவர் வந்தால் அது பாஜக கூட்டணிக்கத்தான் எதிராக மாறும். எதிர்க்கட்சி வாக்குகள் பிரியும். அது நிலைமையை மோசமாக்கும். அதிமுக வாக்கு வாங்கி குறையும்.

6. விஜய்யிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள்.. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஆளும் கட்சிகளை எதிர்க்க முடியாது. இங்கே பாஜக, அங்கே திமுகவை ஒரே நேரத்தில் எதிர்க்க நீங்கள் ஜெயலலிதா கிடையாது. உஷாராக இருங்கள். இப்பொது வழக்கில் வசமாக மாட்டிவிட்டீர்கள். கவனமாக இருங்கள். கோர்ட் உங்கள் மீது கோபத்தை காட்டிவிட்டது. டெல்லி சப்போர்ட் இல்லாமல் நீங்கள் தாக்கு பிடிக்க முடியாது. கவனமாக இருக்கவும். உங்களுக்கு தேர்தல் நேரத்திலும் எங்கள் லாபி தேவை. நீங்கள் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. அப்படி இருக்க.. எப்படி ஆட்சிக்கு வர நினைப்பீர்கள்.. முதலில் உங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்குமா? என்று பாஜக செக் வைத்துள்ளதாம்.

7. இப்படிப்பட்ட நிலையில் தவெக உள்ளேயே விஜய்க்கு சிலர் அழுத்தம் கொடுக்கிறார்களாம்.. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டு.. நாமே "சின்ன தாமரை கண்ணில் பூத்ததே" என்று பாடல் பாடி கிண்டலடிக்கும் அளவிற்கு தாமரை கட்சியுடன் கூட்டணி வைக்க கூடாது. அப்படி வைத்தால் கரூர் விவகாரத்தில் வேண்டுமென்றால் நமக்கு சாதகமாக முடிவுகள் வரலாம். ஆனால் அரசியல் ரீதியாக அது நமக்கு முடிவுரையாக இருக்கும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்களாம்..

8. பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறி வருகிறார். அவர்களுடன் முதல் தேர்தலே கூட்டணி வைத்தால் விஜய் அரசியல் முடிவிற்கு வரும். பாஜகவின் மத ரீதியிலான அரசியல் விஜய் முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலுக்கு பெரிய சிக்கலாகும். விஜய் தலித், கிறிஸ்துவர்கள் வாக்குகள் குறி வைக்கிறார். ஆனால் அவர் பாஜக உள்ள கூட்டணிக்கு சென்றால் அது விஜய்க்கு சிக்கலாகும் என்று விஜய்க்கு நெருக்கமான சிலர் அறிவுரை வழங்கி உள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+