கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் விஜய்.. திமுகவின் ஆணி வேரை ஆட்டும் சூப்பர் பிளான்.. அடடா
சென்னை: ஆளும் திமுகவின் அஸ்திவாரத்தை அசைக்க போகும் முக்கியமான திட்டம் ஒன்றை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் செய்ய உள்ளதாம். இதற்கான ஆலோசனைகளை அவர்கள் நடத்தி வருகிறார்களாம்.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 40லும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது. அதிலும் முதல்முறையாக ஒரு தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது.
கூட்டணி: தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .
தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .
அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .
தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .
நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.
விஜய் பிளான்: திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் கூட்டணி. காங்கிரஸ் 10 சதவிகித வாக்குகள் மற்ற கட்சிகள் 2-5 சதவிகித வாக்குகள் வென்றது திமுகவின் வெற்றிக்கு பெரிய காரணம் ஆகும்.
இதைத்தான் ஆட்ட விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஆளும் திமுகவின் அஸ்திவாரத்தை அசைக்க போகும் முக்கியமான திட்டம் ஒன்றை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் செய்ய உள்ளதாம். இதற்கான ஆலோசனைகளை அவர்கள் நடத்தி வருகிறார்களாம்.
அதன்படி நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம் என்கிறார்கள். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம்.
அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்ஸ் செல்ல வாய்ப்பு இல்லை.
இதனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் இன்னும் அவர்கள் ஓகே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறலாம்.
பலரும் . தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை விட திமுக கூட்டணியை உடைப்பதே விஜயின் முக்கிய திட்டம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications