“ஹிஸ்டரி”.. கர்நாடகா தோல்வி 2024 பிரதமர் தேர்தலில் பாஜகவை பாதிக்குமா? 2019 ரிசல்ட் சொல்வது இதான்
சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அடைந்து இருக்கும் தோல்வி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? 2019 நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது என்ன? விரிவாக பார்ப்போம்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகா மாநில அரசின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தியது. நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்று உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் மட்டுமே பிடித்து படுதோல்வியை தழுவி இருக்கிறது.
கிங் மேக்கராக இருப்பார் என்று கருதப்பட்ட குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று இருக்கின்றன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் பாஜக சந்தித்து இருக்கும் தோல்வி அதில் எதிரொலிக்கும் என்று பலரும் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் குறைவான இடங்களில் வென்றாலும் மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
அதே ஆண்டில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்ததா என்பதை பார்ப்போம்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மஜத - காங்கிரஸ் கூட்டணியே தொடக்கத்தில் ஆட்சியமைத்தது. பாஜக அந்த தேர்தலில் 224 தொகுதிகளில் 104 இடங்களிலேயே வெற்றிபெற்றது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 28 இடங்களில் 25 இடங்களில் வெற்றிபெற்றது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைத்தது. பாஜக அந்த தேர்தலில் 230 தொகுதிகளில் 109 இடங்களிலேயே வென்றது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 20 இடங்களில் 28 இடங்களில் வெற்றிபெற்றது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. பாஜக அந்த தேர்தலில் 200 தொகுதிகளில் 73 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 இடங்களில் 24 இடங்களில் வெற்றிபெற்றது.
அதே ஆண்டு நடைபெற்ற சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. பாஜக அந்த தேர்தலில் 90 தொகுதிகளில் வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது. ஆனால், அடுத்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 11 இடங்களில் 9 இடங்களில் வெற்றிபெற்றது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications