74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ்
சென்னை: தமிழகத்தின் தென்மண்டல அரசியலில் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் ஒரு தனித்துவமான போக்கைக் கொண்டது. தொழில் வளம், சாதியக் கட்டமைப்பு மற்றும் வலுவான கட்சிப் பின்னணி எனப் பல்வேறு காரணிகள் இங்கு வெற்றியை தீர்மானிக்கின்றன. அந்தவகையில், வரப்போகும்தேர்தலில் இம்மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் தன்வசப்படுத்த ஆளும் திமுக வியூகம் வகுத்து வருகிறது. இன்னொருபக்கம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுக வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியை உள்ளடக்கிய தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, ஒரு வர்த்தக மையமாகத் திகழ்கிறது. இங்கு இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூகத்தினர், மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் எனப் பரவலான வாக்கு வங்கி உள்ளது.

கோவில்பட்டி - அதிமுக, திமுக
தற்போதைய அமைச்சரான கீதா ஜீவன், தொகுதிக்குள் எளிதில் அணுகக்கூடிய மக்கள் பிரதிநிதியாகப் பெயரெடுத்துள்ளார். திமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் மீண்டும் அவரே களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடத் தயாராகி வருகின்றனர். இருப்பினும், வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாத சூழலும், அமைச்சரின் தனிப்பட்ட செல்வாக்கும் தற்போதைக்கு திமுகவிற்கே சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
திமுகவின் 74 வருஷ சவால்
இந்த மாவட்டத்தில் மிகவும் கவனிக்கத்தக்க தொகுதியாக கோவில்பட்டி உருவெடுத்துள்ளது. 1952 முதல் நடந்த 16 தேர்தல்களில், திமுக ஒருமுறை கூட இங்கு வெற்றி பெறவில்லை என்பது அக்கட்சிக்கு ஒரு வரலாற்றுச் சவாலாகவே நீடிக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், அதிமுக 5 முறையும் இங்கு வெற்றி வாகை சூடியுள்ளன. 2006 முதல் தொடர்ந்து 4 முறை அதிமுகவின் வசமே இத்தொகுதி இருந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இங்குத் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். எனவே, இந்த முறை அந்த வரலாற்று கறையை போக்க திமுக நேரடியாகக் களம் காணத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது..
ஆனால் தேவர், நாயக்கர் மற்றும் நாடார் சமூக மக்கள் அதிகமுள்ள இத்தொகுதியில், கடம்பூர் ராஜூவின் தனிப்பட்ட செல்வாக்கு மீண்டும் அதிமுகவுக்கு பலம் சேர்க்கிறது..
ஸ்ரீவைகுண்டத்தின் மும்முனைப் போட்டி
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், தன்னுடைய சொந்த நிதியில் ஏகப்பட்ட நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இது அவருக்குச் சாதகமாக இருந்தாலும், தொகுதிக்குள் அவர் அடிக்கடி வருவதில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக சண்முகநாதன் தனக்குச் சாதகமாக்கி கொண்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எனவே, நாடார், தேவர் மற்றும் பட்டியலின மக்கள் சம பலத்துடன் உள்ள இங்கு வெற்றி பெற இரு கட்சிகளுமே கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் போல தெரிகிறது.
விளாத்திகுளம் & ஒட்டப்பிடாரம் நிலவரம்
விளாத்திகுளம் தொகுதியை எடுத்துக்கொண்டால், திமுகவின் மார்க்கண்டேயன் "வனத்திற்குள் விளாத்திகுளம்" என்ற திட்டத்தின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியைச் செய்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளார். ஆனால், அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியும் ஓரளவு நிலவுவதாக தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தனது செல்வாக்கைத் தக்கவைக்கப் போராடுகிறது. கோவில்பட்டி போன்ற தொகுதிகளில் அதிமுக இரும்புக்கோட்டையாக திகழ்கிறது.. இருந்தாலும், கூட்டணிக் கணக்குகளும், புதிய வாக்காளர்களின் மனநிலையுமே இந்த 6 தொகுதிகளின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்











Click it and Unblock the Notifications