பின்வாங்கும் கட்சிகள்? தனிமையில் பாஜக! தேசிய அளவில் என்டிஏ செல்வாக்கு எப்படி?
சென்னை: பாஜகவுடன் பெரிய கட்சிகள் ஏன் கூட்டணி வைக்கத் தயங்குகின்றன? அதற்கான காரணம் என்ன?
தேசிய அளவில் என்டிஏ கூட்டணியில் மிகப்பெரிய கட்சி பாஜகதான். இந்தக் கட்சிக்கு மக்களவையில் 290 எம்பிகள் உள்ளனர். அதைப்போலவே ராஜ்ய சபாவில் 93 எம்பிகள் உள்ளன. ஆக மொத்தம் 383. இன்றைய நிலையில் பாஜகதான் பெரிய பலம் பொருந்திய கட்சி.

இவ்வளவு பலம் கொண்ட என்டிஏ கூட்டணியில் 39 கட்சிகள் இணைந்துள்ளன. மேகாலயாவில் நேஷனல் பீப்புள்ஸ் பார்ட்டி உள்ளது. அம்மாநிலத்தில் இந்தக் கட்சிதான் ஆளும் கட்சியாக உள்ளது. கான்ராட் சங்மா முதலமைச்சராக இருக்கிறார். இந்தக் கட்சிக்கு இரண்டு அவைகளிலும் தலா 1 எம்பி உள்ளனர்.
அடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் ’ஆல் ஜார்கண்ட் ஸ்டூடெண்ட்ஸ் யூனியன் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஏஜெஎஸ்யு. இந்தக் கட்சிக்கு மக்களவையில் மட்டும் ஒரு எம்பி உள்ளார். இந்த மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. ஏஜெஎஸ்யு தலைவரான சுதேஷ் மஹ்தோ துணை முதல்வராக உள்ளார்.
ஆக, ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள இந்தக் கட்சி தேசிய அளவில் பாஜக கூட்டணியில் உள்ளது. இவரைத் தொடர்ந்து ஆல் இண்டியா என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணியில் உள்ளது.

இந்தக் கட்சி புதுச்சேரியில் ஆளும் கட்சி. என்.ரங்கசாமிதான் முதலமைச்சராக உள்ளார். இது ஒரு யூனியன் பிரதேசம். ஒரே ஒரு எம்பி தொகுதிதான். என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு எம்பியும் இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அப்ன தள் கட்சி பாஜக கூட்டணியில் என்.டி.ஏவில் இடம்பெற்றுள்ளது. உபியில் உள்ள வாரணாசியில் இந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அங்குள்ள குர்மி சமூக மக்கள் இதில் அதிகமாக உள்ளனர்.
வாரணாசி மோடியின் தொகுதி. ஆகவே, பிரதமர் பார்வைக்கு நெருக்கமாக உள்ள கட்சி. இக்கட்சிக்கு மக்களவையில் 2 எம்பிகள் உள்ளனர். இதன் தலைவர் அனுப்ரியா பட்டேல். இவர் மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருக்கிறார்.

அசாமில் உள்ள அசோம் கண பரிஷத் கட்சி இதே கூட்டணியில் உள்ளது. இதற்கு ராஜ்ய சபா ஒரு சீட்டு உள்ளது. அடுத்தது ஒடிசாவில் பிஜூ ஜனதா தள். அம்மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி.
நவீன் பட்நாடக் கட்சிக்கு மக்களவையில் 9 எம்பிகள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 12 எம்பிகள் உள்ளனர். மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் தான் உள்ளார்.
இதே கூட்டணியில் உள்ள மேகாலயாவைச் சேர்ந்த ஹில் ஸ்டேட் பீப்புள்ஸ் டாமாக்ரடிக் பார்டி, இண்டிஜினஸ் பீப்புள்ஸ் ஃபிரண்ட் ஆப் திரிபுரா, ஹரியானாவைச் சேர்ந்த ஜனயாக் ஜண்டா பார்டி, கோவாவில் உள்ள மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகிய 4 கட்சிகளுக்கு எந்த எம்பியும் இல்லை. தேவகவுடாவின் ஜனதா தள் (எஸ்) கட்சிக்கு இரண்டு அவைகளில் தலா 1 எம்பிகள் இருக்கிறார்கள்.

இந்த என்.டி.ஏ கூட்டணியில் 'இந்தியா' கூட்டணியை விட்டு சமீபத்தில் வெளியேறி இணைந்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தள் (யு) கட்சிக்கு மக்களவையில் 16 எம்பிகள் உள்ளனர்.
ராஜ்ய சபாவில் 5 எம்பிகள் உள்ளனர். இதே மாநிலத்தில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சிக்கு ஒரே ஒரு உள்ளார். ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு மக்களவையில் 5 எம்பிகள் உள்ளனர்.
மணிப்பூரில் நாகா பீப்புள்ஸ் ஃபிரண்ட் கட்சிக்கு ஒரு எம்பி இருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 அவைகளில் தலா 1 எம்பி உள்ளனர். இதே மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சிவசேனாவுக்கு மக்களவையில் 13 எம்பிகள் மட்டும் உள்ளனர்.
நாகலாந்தில் உள்ள Nationalist Democratic Progressive Party, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மக்களவையில் ஒரு எம்பி இருக்கிறார்.
மற்றபடி இந்தக் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் பெரியளவுக்கு மக்களவையில் அல்லது மாநிலங்கள் அவையில் பலம் உள்ள கட்சிகளாக இல்லை. அதிக பட்சம் ஒரு எம்பி மட்டும் இருப்பார்கள். பல கட்சிக்கு எம்பிகளே இல்லை.
தமிழ்நாட்டிலிருந்து பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ள கட்சிகள் எவையும் மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிகள் இல்லை. தேர்தல் களத்தையே சந்திக்காத ஜிகே வாசன் புதியதாக என்டிஏ கூட்டணிக்குள் சென்றுள்ளார்.
அவர் கட்சி பற்றிச் சொல்லத் தேவை இல்லை. அடுத்து புதிய நீதிக்கட்சி. பணம் உள்ள அளவுக்குத் தொடர்கள் இல்லாத கட்சி. இதே பட்டியலில்தான் ஐஜேகேவை யும் சேர்க்க வேண்டும். ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்துள்ளது. இந்தப் பட்டியலில் புதிய வரவாக சரத்குமார் போய்ச் சேர்ந்துள்ளார்.
இந்த என்.டி.ஏ கூட்டணியில் சுமார் 10 கட்சிகள் தேறும். அதற்கு மேல் உள்ள கட்சிகள் அனைத்தும் செல்லாத காசுகள் என்றே சொல்லப்படுகிறது.
தேசிய அளவில் பாஜக மட்டுமே கூட்டணியில் சக்தி வாய்ந்ததாக உள்ளது. சில மாநிலங்களில் ஆளும் கட்சிகள் சில கூட்டணியில் உள்ளன. ஆனால், அந்தக் கூட்டணி கூட இயற்கையான கூட்டணியாக இல்லை. கட்சிகளை உடைத்து எம்.எல்.ஏக்களை இழுத்து கட்டமைக்கப்பட்ட கூட்டணியாக உள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைக்கப் பலரும் தயங்கி வருகிறார்கள். குறிப்பாக பாமகவுக்கு பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அந்த முடிவை உடனடியாக எடுக்க முடியாத அளவு தமிழக தேர்தல் களம் உள்ளது.
சொல்லப் போனால், அதிமுக Vs திமுக என்கிற நிலையே இன்னும் உருவாகவில் லை. அப்படி உள்ள போது பாஜகவை ஒரு பொருட்டாகவே அதிமுக உட்பட எந்தக் கட்சிகளும் கணக்கில் கொள்ளவில்லை.
அண்ணாமலை, தனது என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டில் பெரிய அளவுக்குப் பாதிப்பை உண்டாகி இருப்பதாகச் சொல்கிறார். அவருக்கே அதன் பலவீனம் என்னவென்று தெரியும்.
ஆனால், கடந்த காலங்களில் பாஜகவின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில் அண்ணாமலை யாத்திரை தமிழ்நாட்டில் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துள்ளது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக மாறாது.

இன்னமும் பாஜகவுக்கு எதிராகவே தமிழ்நாட்டுத் தேர்தல் களம் உள்ளது. குறிப்பாக திமுகவின் பிரச்சாரத்திற்கு முன்னால் பாஜகவினர் ஈடு கொடுக்க முடியவில்லை.
குறிப்பாக வெள்ள நிவாரண நிதி, மத்திய அரசு நிதி பங்கீட்டில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து திமுக பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்து மக்களிடம் வேலை செய்கின்றன. பாஜக இன்னும் அப்படி ஒரு வலிமையான ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை.
இப்படியே போனால், வரும் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் தனித்து விடப்படலாம். இறுதியில் டிடிவி, ஒபிஎஸ் கூட பாஜவின் எதிர்முகாம் பக்கம் நிற்கலாம். பாமககூட அதிமுக பக்கம் சாய்வதற்கான சான்ஸ் அதிகம் தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, தேசிய அளவிலும் பலவீனமாகவே மாறிவருகிறது.
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications