தலைமறைவாகிட்டாரு? செந்தில் பாலாஜி ரத்த சொந்தத்திற்கு ஷாக் கொடுக்கும் "ஈடி".. களமிறங்கிய உளவுத்துறை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. அதிலும் இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திடீரென அமலாக்கத்துறை ரெய்டுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார்.

அவர் வீட்டில் ரெய்டு மற்றும் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை பொதுவில் வெளியிடவில்லை. அதே சமயம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அசோக்: புழல் சிறையில் முதல் வகுப்பு செல்லில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனின் கெடு 27-ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அவர் ஆஜராக வேண்டும். 27-ந்தேதி வரை தான் அவருக்கு கடைசி கெடு.
அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால், அவரை தலைமறைவு குற்றவாளியாகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறதாம். 27-ந்தேதி ஆஜராகச் சொல்லி அனுப்பப்பட்ட சம்மனுக்கு, இதய நோய் சிகிச்சையில் நான் இருந்து வருவதாலும், அந்த சிகிச்சை முடிய சில மாதங்கள் ஆகுமென்பதாலும் நேரில் ஆஜராக 6 மாத கால அவகாசம் தர வேண்டும் என கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தார் அசோக்.
அந்த கோரிக்கை கடிதம் அமலாக்கத்துறையால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தி விட்டது.
அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications