கரூர் கூட்டத்தில் விஜய் ஜனநாயகன் ஷூட்டிங்? SIT விசாரணையை தவெக எதிர்க்க இப்படி ஒரு காரணமா? ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

தவெக தாக்கல் செய்த மனு

இந்த மனு, வழக்கறிஞர்கள் டிக்ஸிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், மற்றும் யாஷ் வி. விஜய் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 3 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

TVK Vijay

அந்த உத்தரவில், காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. காவல்துறையின் விசாரணையின் சுதந்திரத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியும், தமிழ்நாடு காவல்துறை மூத்த அதிகாரிகள் மட்டுமே கொண்ட SIT ஐ நியமித்தது தவறு என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

SIT விசாரணைக்கு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் தடைகேட்பதற்குப் பின்னணியில் ஜனநாயகன் படம் இருக்கலாம் என்ற முக்கிய வாதம் வைக்கப்படுகிறது. அதாவது ஜனநாயகன் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக சில காட்சிகளை இதில் எடுத்திருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.

Arri Alexa 35 போன்ற சினிமாத்துறை கேமராக்கள் விஜயின் பிரச்சார வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை மேற்படி விசாரணையில் அம்பலமாகிவிடலாம் என்ற எண்ணத்தில் SITக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

நக்கீரன் கோபால் புகார்

முன்னதாக கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக நக்கீரன் கோபால் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் அளித்துள்ள பிரத்யேக பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

அதில், விஜய்யின் கரூர் கூட்டத்தில் 'ஜனநாயகன்' ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தை எல்லாம் படத்திற்க்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர். கூட்டத்தில் அதற்கான காட்சிகள் எடுத்துள்ளனர். அதை படத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டு காட்சிகள் எடுத்துள்ளனர். அந்த படத்திற்கான சூட் இதில் செய்ததாக எனக்கு தகவல் வந்தது. கட்டாயம் வரும்.

சேர்த்து வைத்து தாமதமாக வந்தது.. கூட்டம் சேர்த்தது எல்லாம் இதற்காகவே. படம் வரும் போது பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு என்று தேடி மக்கள் வருகிறார்கள். நம்மை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை காக்க வேண்டும் என்று விஜய் நினைக்கவில்லை. அப்படி நினைக்காமல்.. அவர்களை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் மனநிலை எவ்வளவு மோசமான மனநிலை. அப்படி ஒரு மனநிலையோடு மோசமாக செயல்பட்டு உள்ளார் விஜய்.

அங்கே பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்.. ஏது ஆனார்கள் என்று கூட கேட்காமல்.. ஓடி போய்விட்டார் விஜய், என்று நக்கீரன் கோபால் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+