புதிய த்ரெட்ஸ் செயலியின் லோகோ தமிழ் வார்த்தை "கு" ஆ? மார்க் அந்த லோகோவை தேர்வு செய்தது ஏன்?
சென்னை: புதிதாக தொடங்கப்பட்டு உள்ள த்ரெட்ஸ் செயலியின் லோகோ பார்க்க கு என்ற தமிழ் எழுத்து போல இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.. பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் இடையிலான போட்டி மிக தீவிரம் ஆகி உள்ளது. பல்வேறு துறைகளில் இவர்கள் மிக மோசமாக போட்டியிட்டு வரும் நிலையில்தான் தற்போது மார்க் ஜுக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் போன்ற போஸ்ட் செய்யும் தளமாக இயங்கி வந்த த்ரெட்ஸ் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் போலவே தோற்றம் கொண்ட த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது.
இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.
அதே சமயம் இன்ஸ்டாகிராமில் 2.35 பில்லியன் யூசர்கள் உள்ளனர். இந்த இன்ஸ்டாகிராம் யூசர்கள் மொத்தமாக அதன் கிளை நிறுவனமான த்ரெட்ஸ் செயலிக்கு வந்தால் த்ரெட்ஸ் செயலி ட்விட்டரை ஒரே வாரத்தில் முந்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த த்ரெட்ஸ் செயலிக்கு வரிசையாக யூசர் வந்துகொண்டு இருக்கும் நிலையில்தான் அதன் லோகோ மக்கள் இடையில் கவனம் பெற்றுள்ளது.
த்ரெட்ஸ் லோகோ பார்க்க கு என்ற தமிழ் எழுத்து போல இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்ய தொடங்கி உள்ளனர். அப்படியே கு என்ற எழுத்தை எடுத்து லோகோவாக வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி உள்ளனர்.
அதே சமயம் இந்த லோகோ என்பது கு கிடையாது. இது அட் என்ற @ ஆங்கில எழுத்தின் மாடர்ன் வடிவம் ஆகும். ஒருவரை டேக் செய்ய அட் என்பதை பயன்படுத்த வேண்டும் என்பதால் த்ரெட்ஸ் செயலி லோகோவை @ என்ற பாணியில் மினிமலிஸ்ட் முறையில் லோகோவாக உருவாக்கி உள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக த்ரெட்ஸ் இணைந்துள்ளது. ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று ட்விட்டரில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில்தான் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதையடுத்துதான் தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications