Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? வலுக்கும் கோரிக்கைகள்.. பறக்கும் மெசேஜ்கள்.. குறி வைக்கும் பிசிசிஐ?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் நடத்தப்பட்ட ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் பலியாகினர். இந்த கொடூர சம்பவம்.. விபத்து என்பதை தாண்டி சிலரின் விளம்பர மோகத்திற்காக ஏற்பட்ட மரணமாக மாறி உள்ளது. அதாவது man made disaster. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் RCB அணிக்கு ஒரு வருட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அணியின் அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெங்களூர் ஆர்சிபி சம்பவம்

பெங்களூரில் RCB அணி, ஐபிஎல் பயணத்தை கொண்டாடும் வகையில் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைச் சந்தித்து உரையாடவும், பொருட்கள் வாங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வசதிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று கூறப்படுகிறது.

Is the RCB team facing an 1-year ban after the RCB Victory celebrations ended in a stampede

கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். 11 பேர் பலியாகினர். அதிகப்படியான ரசிகர்களின் வருகையால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயமடைந்தனர். சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கே.எஸ்.சி.ஏ (KSCA) மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்கும் முன் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

பெங்களூருவில் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளை நடத்தும் போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என்று காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த துயர சம்பவம், விளையாட்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

நாடு தழுவிய எதிர்ப்பு

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே #BanRCB, #RCBStampede, #JusticeForFans போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை போதிய ஏற்பாடுகள் இல்லாமல் நடத்த அனுமதித்தது எப்படி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

"இது வெறும் நிர்வாக குளறுபடி மட்டுமல்ல, இது ஒரு குற்றவியல் அலட்சியம்" என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

"RCB பிராண்டை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது, ஆனால் பொறுப்பாக செயல்படவில்லை. ரசிகர்களின் மரணத்திற்கு அந்த அணியே காரணம். அவர்களை ஒரு வருடம் தடை செய்யுங்கள், அப்போதுதான் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்.. மற்ற அணிகளும் உஷாராக இருக்கும்" என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

உலகளாவிய விளையாட்டு அமைப்புகள் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய கிளப்புகளை ஏற்கனவே தண்டித்த வரலாறுகள் உண்டு. அதேபோல ஆர்சிபி மீது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர்.

சங்கடமான நிலையில் அணி

RCB அணி களத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை விட பிராண்ட் மற்றும் பிரபலங்களின் ஈர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அணியின் முன்னுரிமைகள் தவறாக உள்ளன என்றும்.. விளம்பர பிரச்சாரங்கள், பொருட்கள் விற்பனை மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களுடனான ஒப்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். ஆனால் ரசிகர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று புகார் வைத்துள்ளனர்.

வலுக்கும் சம்பவம்

ஐபிஎல் இன்ஸ்டாகிராம் அதிகாரபூர்வ கணக்கு.. இப்போது RCB அணியை பின்தொடர்வதை நிறுத்தி உள்ளது. 10 அணிகளையும் பின் தொடர்ந்த ஐபிஎல் பக்கம் இப்போது ஆர்சிபியை unfollow செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் கூறப்படவில்லை.

இருப்பினும் ஆர்சிபி மீது விதிக்கப்படும் தடையின் அறிகுறியாக இது இருக்கலாம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ஆர்சிபி மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தற்போது வரை RCB அணியோ அல்லது ஐபிஎல் நிர்வாகமோ அதிகாரப்பூர்வமாக விளக்கம் இதற்கு அளிக்கவில்லை. இதனால் RCB அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்காலிக தடை, அபராதம் அல்லது சட்டரீதியான நடவடிக்கை என எதுவாக இருந்தாலும் இந்த சம்பவத்தை எளிதாக கடந்து செல்ல முடியாது என்பதே உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+