வெங்கடேச பண்ணையார் VS பசுபதி பாண்டியன்.. கதைதான் பைசன்.. சாட்டை துரைமுருகன் எச்சரிக்கை!
சென்னை: வெங்கடேச பண்ணையார் VS பசுபதி பாண்டியன் இடையிலான மோதல் கதைதான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியே வரும் பைசன் படத்தின் கதை என்று நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் தீவிர அரசியல் பேசக்கூடியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். ஜாதி ஆணவக்கொலைகளை மனதில் வைத்து, அதன் அரசியலை பேசக்கூடிய படமான பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் பெற்றவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே வலுவான அரசியல் பேசியவர் மாரி செல்வராஜ்.
பல விருதுகளை வென்ற அந்த படத்தின் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார் மாரி செல்வராஜ். ஜாதி ஆணவக்கொலைக்கு எதிரான பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்தது. அதை தொடர்ந்து அவர் எடுத்த கர்ணன் படம் இன்னும் அதிகம் கவனம் பெற்றது. 90களில் தென் மாவட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து அந்த படம் எடுக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு படங்களும் உண்மை சம்பவங்களின் கோர்வையாக இருந்தது.

மாரி செல்வராஜ் படம்
அடுத்த கட்டமாக மாமன்னன் படம் மாரி செல்வராஜ் மூலம் எடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் படுகிற கஷ்டம், தனி தொகுதியில் வென்றவர்களுக்கு உண்மையில் அரசியல் பலம் இருக்கிறதா.. அவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை பல உண்மை சம்பவங்களின் கோர்வையாக எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். இந்த 3 படங்களும் வலுவான அரசியல் பேசியது.
அதை தொடர்ந்துதான் வாழை படம் எடுக்கப்பட்டது. வாழை படம்.. வாழை சுமக்கும் சிறுவர்களின் கதை போல தோன்றினாலும்.. சம்பள குறைப்பு, தொழில்துறையில் நிலவும் ஆதிக்கம், கூலிகளுக்கு இழைக்கப்படும் அநீதி வரை பல அரசியலை, முக்கியமாக கம்யூனிச அரசியலை பேசும் வகையில் மாரி செல்வராஜ் வாழை படத்தை எடுத்திருந்தார். மேற்கண்ட 3 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும்.
பைசன் படத்தின் முன்னோட்டம் பார்க்கிற போது வெங்கடேச பண்ணையார் VS பசுபதி பாண்டியன் பின்னணி கதையாக தோன்றுகிறது !
— Duraimurugan (@Saattaidurai) October 14, 2025
1990
தெக்க !
நிச்சயம் பெரிய விவாதங்களை பைசன் உருவாக்கும் !#Bison pic.twitter.com/XjCXWZEXOD
பைசன்
இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் பைசன் படத்தை இயக்கி உள்ளார். இந்த வாரம் பைசன் படம் வெளியாகிறது. இந்த நிலையில் பைசன் படத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் செய்துள்ள போஸ்டில், பைசன் படத்தின் முன்னோட்டம் பார்க்கிற போது வெங்கடேச பண்ணையார் VS பசுபதி பாண்டியன் பின்னணி கதையாக தோன்றுகிறது ! 1990 தெக்க ! நிச்சயம் பெரிய விவாதங்களை பைசன் உருவாக்கும் !, என்று குறிப்பிட்டு உள்ளார்.
1990 தெக்க என்ற கார்ட் உடன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மணத்தி கணேசன் என்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் படத்தில் கபடி தாண்டி பல கடுமையான, தீவிர அரசியல் பேசப்பட்டது போல தெரிகிறது. முக்கியமாக அரசியல் மோதல்கள் பலவற்றை காட்சிப்படுத்தி உள்ளதாக தோன்றுகிறது.
அதிலும் ஹீரோவாக வரும் துருவ் விக்ரம் இந்த அரசியல் மோதலால் பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பைசன் படத்தின் முன்னோட்டம் பார்க்கிற போது வெங்கடேச பண்ணையார் VS பசுபதி பாண்டியன் பின்னணி கதையாக தோன்றுகிறது என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications