Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ் இல்லையா? ஆரியர், திராவிடர் சர்ச்சை தோன்றியது எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்தை சுந்தரம் பிள்ளை எழுதிய காலத்தில் ஆரியர் மற்றும் திராவிடர் என்ற சண்டையே நடைபெறவில்லை என்பதும் தனித்தமிழ் இயக்கம் என்பது 1920களிக்குப் பிறகு புதியதாக தோன்றியது என்பதும் தெரியாமல் பலரும் சமூக ஊடகத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பனிப்போர் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தூர்தர்ஷன் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். அங்கே ஒலித்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை தவிர்த்துவிட்டுப் பாடப்பட்டது.

cm stalin r n ravi

இந்தச் சர்ச்சை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "ஆளுநரா? ஆரியநரா?" என்று கேள்வி எழுப்பி இருந்த அவர், "திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்" என்று விமர்சித்திருந்தார்.

அதற்கு ஆளுநர் ரவி, "எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக எனக்குப் பாடத் தெரியும். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது. இனவாத கருத்துகளை அவசரகதியில் முதல்வர் பொதுவெளியில் வைத்ததால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு மீண்டும் விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன்' எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாததை அறிந்து உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவரது மனோன்மணீயம் நாடக நூலில் எழுதி 1891 இல் வெளியிட்டார். இது லார்ட் லிட்டென் பிரபு என்பவர் எழுதிய "ரகசிய வழி" எனும் நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். இதனை தமிழறிஞர் 1922 இல் எஸ். வையாபுரிப் பிள்ளை இரண்டாம் பதிப்பு செய்து வெளியிட்டுள்ளார். அதைத்தவிர்த்து தமிழணங்கு என்ற பத்திரிகையில் ஏப்ரல் 1941 ஆம் ஆண்டு இப்பாடலின் முழு வடிவம் வெளியானது.

cm stalin r n ravi

ஆளுநருக்கும் முதல்வருக்கும் இந்தச் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் பலரும் 1941இல் அச்சில் வந்த பாடலின் நகலை சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வரலாற்றை அறியாத சில திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி சுந்தரனார் எழுதவே இல்லை. அவர் தமிழர்நல் திருநாடு என்றுதான் எழுதினார். அதை திமுகவினர் திராவிடநல் திருநாடும் எனத் திரித்துவிட்டனர் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதனிடையே தேவநேய பாவாணரின் வாரிசுகளான தமிழ்த் தேசியவாதிகள், இந்தத் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் தமிழிலே எழுதப்படவே இல்லை. அதில் நிறையச் சொற்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றனர். எனவே நல்ல தனித் தமிழ்ப் பாடலை அரசு தேர்வு செய்து வைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதியுள்ள தமிழணங்கு பாடலில், சீராடும் வதனமெனத் திக பரதக் கண்ட மிதில் என்பதில் 'வதனம்' என்ற சொல்லும் 'பரதக் கண்டம்' என்பது வடமொழியாகும். அதேபோல் தெக்கணனும் என்பதும் 'தரித்த', 'திலகம்', 'உலகு', 'திசை', 'வாசனை' எனப் பல சொற்களும் தமிழே இல்லை என சமூக ஊடகத்தில் சிலர் வாதிட்டு வருகின்றனர். அதற்கு சுந்தரனார் என்பதே தமிழ்ப் பெயரில்லை என்று ஒருவர் பதிலளித்துள்ளார்.

cm stalin r n ravi

தனித்தமிழ் இயக்கம் என்பது மறைமலை அடிகள் காலத்தில் தோன்றியதுதான். அவர் 1920களுக்குப் பின்னதாக தனித் தமிழியக்கத்தை உருவாக்கினார். இவரது இயற்பெயரே வேதாசலம் பிள்ளை. அதுவும் தமிழ் கிடையாது. வேதாசலம் என்பதைத்தான் அவர் மறைமலை அடிகள் எனச் சுத்த தமிழில் மாற்றிக்கொண்டார்.

தமிழ்த்தாய் எழுதப்பட்டது 1891. மறைமலை அடிகள் பிறந்தது 1876 ஆம் ஆண்டும். தனித்தமிழ் இயக்கம் தொடங்கியது 1920இல் தான். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் முன்பே தமிழ்த் தாய் வாழ்த்து எழுதப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் தனித்தமிழ் இயக்கம் எல்லாம் இல்லை. பல தமிழ் அறிஞர்கள் சமஸ்கிருதத்தில் பண்டிதர்களாக இருந்தனர். ஆரியர் திராவிடர் சண்டை எல்லாம் இவர் காலத்தில் இல்லை. 1914க்குப் பிறகுதான் ஆரியர், திராவிடர் அரசியலே வந்தது.

பிராமணரல்லாதோர் சங்கம் உருவான பிறகுதான் இந்த சமஸ்கிருத எதிர்ப்பு எல்லாம். பாரதி பாடிய பாடல்களில் சமஸ்கிருத கலப்பு உண்டு. பாரதிதாசன் என்று திராவிட இயக்கக் கவிஞர் தனது பெயரை வைத்துக் கொண்டவர் கனக சுப்புரத்தினம்.பாரதி என்பதும் தமிழ்ச் சொல் இல்லை. தாசன் என்பதும் தமிழ்ச் சொல் இல்லை. சூப்பு என்பதும் தமிழ்ச் சொல் கிடையாது. தமிழ்த் தமிழ் இயக்க கவிஞர் எனப் போற்றப்படும் பாரதிதாசன் பாடல்களில் சமஸ்கிருதம் கலந்து இருப்பதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+