திமுகவிற்கு எதிராக திரும்பும் விசிக? விஜய்யின் தவெகவிற்கு 2வது முறை திருமா ஆதரவு.. கவனிச்சீங்களா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் விஜய்யின் தவெகவினரை திமுகவை சேர்ந்த நிர்வாகி தற்குறி என விமர்சனம் செய்ததற்கு திருமாவளவன் உடன்படவில்லை. தவெகவினரை அப்படி சொல்லக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் 2வது முறையாக விஜய்யின் தவெகவிற்கு மறைமுகமாக ஆதரவு கருத்தை திருமாவளவன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. மொத்தம் 8 சட்டசபை தொகுதிகளில் விசிக போட்டியிட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் திருமாவளவனிடம், ''திமுக மாணவரணி செயலாளர் வீரமணி பேசும்போது தற்குறிகள் அதிகமாகிவிட்டனர் என்று சொல்கிறார். திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட்டவர்கள் அறிவாளியாகவும், விஜய்க்கு ஓட்டுப்போட்டவர்கள் தற்குறிகளாகவும் சொல்வதை எப்படி பார்க்கிறீர்கள். சமூக நீதி பேசும் கட்சியில் இருந்து இளைஞர்களை தற்குறிகள் என்று அழைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.
உடன்படாத திருமாவளவன்
அதற்கு திருமாவளவன், ''அந்த கருத்தில் (தற்குறி) எனக்கு உடன்பாடு இல்லை. மக்களை நாம் கொச்சைப்படுத்தக்கூடாது. நமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் நம் மக்கள். நம்முடைய வாக்காளர்கள். அவர்களை உரிய முறையில் மதிக்க வேண்டும் என்பது என்று வேண்டுகோள். விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படி (தற்குறிகள்) எங்கும் பேசியது இல்லை. அந்த சொல்லாடலை நாங்கள் கையாண்டது இல்லை'' என்று கூறினார்.
திமுக நிர்வாகி கூறியது என்ன?
முன்னதாக, நேற்று திமுக மாணவரனி செயலாளர் வீரமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது'GEN Z இளைஞர்கள் அறிவார்ந்த தமிழ் சமுகத்தில் தற்குறிகளாக மாறி வருகின்றனர். இந்த சமயத்தில் அவர்களை வழிநடத்துவதற்காகவும், சீரமைக்க வேண்டும். இதற்கு தமிழ் மாணவர் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்'' என்றார்.
இளைஞர்கள் தவெகவினரை ஆதரிப்பதாக வெளியான தகவலால் அவர் இளைஞர்களை தற்குறி என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் திமுக நிர்வாகி வீரமணிக்கு எதிராக திருமாவளவன் குரல் கொடுத்துள்ளார். அதோடு தவெகவினரை தற்குறி என சொல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
முன்பு திருமாவளவன் கூறியது என்ன?
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவில் பேசினார். அப்போது, ''திமுக தனிப்பட்ட முறையிலேயே ஆட்சி அமைப்பதற்கு போதிய இடம் கிடைக்காமல் போனால் தொங்கு சட்டசபை வரலாம். இவர்களும் (திமுக), அவர்களும் (அதிமுக) ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை வரும்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களுக்கு கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க முயற்சி செய்வார்கள்'' என்று கூறினார்.
அதேபோல் ''தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் வாங்குகின்ற வாக்கு சதவீதத்தை பொறுத்து தமிழ்நாட்டு அரசியல் சூழல் மாறும்'' என்றும் கூறியிருந்தார். திமுகவினர் 200 தொகுதிகளை வெல்வோம் என்று சூளுரைத்து வரும் நிலையில் திருமாவளவன் தொங்கு சட்டசபை தொடர்பாக பேச வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது? என்ற கேள்விகள் எழுந்தது.
இதனால் அவரது இந்த கருத்து திமுகவிற்கு எதிரானதாகவும், விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை திருமாவளவன் ஒப்புக்கொண்டதாகவும் பரவியது. விஜய் வருகையால் தமிழகத்தில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என திருமாவளவன் நினைக்கிறார். இதனால் தான் சட்டசபை தேர்தலில் கூட களமிறங்குகிறார் என்ற தகவல் பரவியது. ஆனால் திருமாவளவன் அதனை மறுத்ததோடு, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார்.
திமுகவிற்கு எதிராக விசிக?
அதன்பிறகு தான் திருமாவளவன் தனது அனைத்து பேட்டிகளிலும் ''விஜய்யால் பெரிய தாக்கம் இல்லை. தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக தனித்தே ஆட்சியை பிடிக்கும்''என்று கூறி வருகிறார் என்று கூறி வரும் நிலையில் தற்போது திமுக மாணவரனி செயலாளரின் தற்குறி குறித்த விமர்சனத்தில் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். இதனால் திருமாவளவன் திமுகவினரின் பேச்சை ரசிக்காமல் எதிராக திரும்ப முடிவு செய்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி












Click it and Unblock the Notifications