மொத்தமாக கைவிட்டுட்டாங்களே.. எல்லாம் தவறான திசையில் போகுது.. புலம்பி தள்ளிய விஜய்.. என்ன பின்னணி?
சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களில் ஒரு கேள்வி தீவிரமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.. கூட்டணியின்றி விஜய் தனியாக நிற்பது ஏன்? தவெக விஜயுடன் ஏதாவது ஒரு கட்சியாவது கூட்டணி வைக்குமா? என்பதே அந்த கேள்வி!
தேர்தல் ஆணையத்தால் 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட உற்சாகத்தில் இருந்த தவெக தொண்டர்களுக்கு, எந்தவொரு பெரிய கட்சியும் இன்னும் கூட்டணிக்கு முன்வராதது சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான திராவிடக் கூட்டணிகள்
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் இரு பெரும் துருவங்களாகப் பிரிந்து கிடக்கிறது. இதில் விஜய்க்கு இடமே இல்லை என்பது போன்ற சூழலே நிலவுகிறது.
திமுக கூட்டணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் திமுக-விலேயே தொடருவதை சமீபத்திய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, விஜய்க்கு ஆதரவாக சில காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்தாலும், டெல்லி மேலிடம் திமுக கூட்டணியே இறுதியானது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, மீண்டும் பாஜக-வுடன் கைகோர்த்துள்ளது. அதுமட்டுமன்றி, சமீபத்தில் பாமக (அன்புமணி அணி) மற்றும் டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகியவையும் இந்த அணியில் இணைந்துள்ளன.
இந்த இரு பெரும் கூட்டணிகளும் கிட்டத்தட்ட எல்லா முக்கிய கட்சிகளையும் தங்களுக்குள் இழுத்துக்கொண்ட நிலையில், விஜய்யின் தவெக எந்தப் பக்கமும் சாய முடியாமல் தனித்து நிற்கிறது.
நெருக்கடியில் தவெக?
கூட்டணி குறித்த மௌனம் ஒருபுறம் இருக்க, விஜய்க்கு எதிராகத் தொடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் அவரை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிபிஐ (CBI) விசாரணை, மற்றும் அவரது 'ஜனநாயகன்' திரைப்படத் தணிக்கை தொடர்பான சிக்கல்கள் விஜய்யைச் சோர்வடையச் செய்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும், சித்தாந்த எதிரி பாஜக என்றும் பிரகடனம் செய்த விஜய், இப்போது இரு தரப்பிலிருந்தும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், "விஜய்யை பாஜக மிரட்டுகிறது" என்று கூறியிருப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இதனால் அப்செட் ஆன விஜய்.. வரிசையாக கரூர் விவகாரத்தில் இருந்தே சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. இப்போது கூட்டணிக்கும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.
விஜய்யின் அடுத்த கட்டம்: தனித்துப் போட்டியா?
ஏற்கனவே தவெக 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து பணிகளைத் தொடங்கிவிட்டது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எண்ணம் விஜய்க்கு இருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறினாலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் கணக்குப்படி கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலான காரியம்.
சீமான் பாணியில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபிப்பாரா? அல்லது கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு 'மாஸ்டர் பிளான்' வைத்து கூட்டணி அமைப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு 'விசில்' சின்னம் கிடைத்தாலும், அதனுடன் கைகோர்க்க யாரும் இல்லை என்பதுதான் விஜய்யின் தற்போதைய கவலை.
-
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications