விசில் சின்னம் விஜய்க்கு மட்டும் சொந்தமா? அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.. இது தவெகவுக்கு ரொம்ப முக்கியம்
சென்னை: விசில் சின்னம் தவெகவுக்கு கிடைத்துள்ளது.. அவர்கள் விரும்பியபடியே அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது... எனினும் தவெகவுக்கு மட்டுமே இந்த விஜய் சின்னம் சொந்தமாகிவிடுமா? அப்படி தவெகா இந்த சின்னத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை கட்சிக்குள் விஜய் மேற்கொள்ளலாம்? அதை பற்றி நாம் இங்கே விரிவாக பார்ப்போம்.
வரப்போகும் தேர்தலை தவெக சந்திக்க போவதாக அன்று முடிவெடுத்ததுமே அக்கட்சிக்கு கிளம்பிய முக்கிய பிரச்சனை சின்னம்தான்..

பொதுச்சின்னமாக "ஆட்டோ" சின்னத்தை விஜய் அப்போது கேட்க முயற்சித்தார். காரணம், கடந்த 2022-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி தேர்தலில் ரசிகர் மன்றமான ''விஜய் மக்கள் இயக்கம்'' போட்டியிட்டனர். அப்போது அவர்கள் ஆட்டோ சின்னத்தைதான் கேட்டு பெற்றிருந்தனர்..
ஆட்டோ கேட்ட விஜய்
அதுமட்டுமல்ல, மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020ல் ஆண்டு கட்சி தொடங்கவிருந்தபோது, ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டு அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டதும் 'ஆட்டோ' சின்னம்தான்..
ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே அறிவிப்புடன் முடிந்து போய்விட்டது. எனவேதான், ஆட்டோ சின்னத்தை விரும்பி தவெக பெற முயற்சி மேற்கொண்டது.. மேலும், வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டி வருவார் விஜய்.. எனவே இந்த ஆட்டோ சின்னத்தை கேட்டு பெறவும் தவெக தயாரானது..
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இடம்பெறவில்லை..
மிஸ் ஆயிருச்சு ஆட்டோ
அதுமட்டுமல்ல, ஆட்டோ சின்னம், கேரள காங்கிரஸ் (ம) என்ற கட்சிக்கு, மாநில அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டு விட்டது... எப்போதுமே ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்பட்டுவிட்ட சின்னத்தை, வேறு மாநிலத்தில் உள்ள வேறு கட்சிக்கு ஒதுக்க மாட்டார்கள் என்பதால், விஜய்யின் "ஆட்டோ" அத்துடன் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.
இதற்கு பிறகுதான் விஜய் மிக தீவிரமான யோசனையில் ஈடுபட்டார்.. யாரும் எதிர்பார்க்காத ஒரு சின்னத்தை தேர்வு செய்ய நினைத்தார்.. இறுதியில்தான் விசில் சின்னம் கோர துவங்கியது தவெக.. தற்போது தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் விஜய்க்கு மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுவிடுமா? என்றால் அது சந்தேகமே.
விசில் சின்னம் விஜய்
காரணம். தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தின் படி, வெற்றிக் கழகம் போட்டியிடாத தொகுதிகளில் பிற சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட கட்சிகள் "விசில்" சின்னத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள், விஜய் சில தொகுதிகளில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தாவிட்டால், அந்த தொகுதிகளில் வேறு யாராவது அதே சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. எனவே, சின்னத்தின் தனித்துவம் பாதிக்கப்படலாம்.
இப்படிப்பட்ட சூழலில், விஜய் தனது "விசில்" சின்னத்தை முழுமையாக தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.. இதற்கு விஜய் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ஊதியாச்சு விசில்
அனைத்து 234 தொகுதிகளிலும் தனிப்பட்ட வேட்பாளர்களை போட்டியிடுவதே ஒரே வழியாகும்.. இதனால், வேறு கட்சிகள் அதே சின்னத்தைப் பயன்படுத்த முடியாமல் தடுக்க முடியும். இதன் மூலம் சின்னம் முழுமையாக விஜய்க்கே பிரதான அடையாளமாக மாறும்.. இதன் மூலம் அவரது பிரபலத்தையும் தேர்தலில் எதிர்ப்பார்க்கப்படும் தாக்கத்தையும் ஒரே நேரத்தில் நிலைநாட்ட முடியும்...
இது அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானது.. ஏனென்றால், ""நடிகர் விஜய் அரசியலில் தனித்துவமாக இருக்க சின்னம் முக்கியம்.... அது தனிப்பட்டதாக இருந்தால், மக்களிடம் செல்வாக்கு மேலும் கூடும்.. ஒருவேளை இதே சின்னத்தை வேறு யாராவது பயன்படுத்தினால், இதனால் விஜய்யின் தனித்துவம் குறையலாம்..
விஜய் செய்ய வேண்டியது?
எனவே, வரப்போகும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, சின்னத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு வந்துள்ளது.. இது வெறும் தன்னிலை பாதுகாப்பு மட்டுமல்ல, தேர்தலில் செய்யும் நுட்பமான வேலையாகும்.... தவெகவின் ஸ்ட்ராட்டஜிக் என்றும் சொல்லலாம்..
அடுத்ததாக, மாவட்டம், ஒன்றியம், வாக்குச்சாவடி அளவுக்கு கட்சியின் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்... அப்போதுதான் சின்னத்தை பயன்படுத்தும் போது பிரச்சனை வந்தால் கட்சி அதை எளிதாக சமாளிக்க முடியும்..
அடுத்ததாக, விசில் சின்னத்தை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பயன்படுத்த வேண்டும்... அதாவது பேனர்கள், போஸ்டர்கள், சோஷியல் மீடியா என அனைத்திலும் அது பிரதானமாக இடம் பெறச்செய்ய வேண்டும்.. அப்போதுதான் மக்கள் அந்த சின்னத்தை விஜயுடன் தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள்.
பிரபலமான வேட்பாளர்கள்
அனைத்தையும்விட முக்கியம், வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.. வெறும் பெயரளவில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், சின்னத்துக்கான மதிப்பே குறைந்துவிடும்.. உள்ளூர் மக்களிடம் சின்னம் பிரபலமாக வேண்டுமானால், அந்த சின்னத்தை மக்கள் மனதில் கொண்டு செல்லக்கூடிய வேட்பாளர்களையும் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
மொத்தம் "விசில்" சின்னம் வெறும் ரசிகர் அடையாளமாக இருந்துவிடாமல், ஒரு கருத்தும், மாற்றமும், அரசியல் நோக்கமும் கொண்டதாக இருந்தால், அந்த சின்னம் நிச்சயம் விஜய்யின் அரசியல் அடையாளமாகவே நிலைக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications