தவறி கூட இந்த தவறை பண்ணிடாதீங்க.. ஒரு ஆதார் கார்டை எத்தனை முறை அப்டேட் செய்யலாம்? ரொம்ப முக்கியம்
சென்னை: ஒரு ஆதார் கார்டில் எத்தனை முறை விவரங்களை அப்டேட் செய்யலாம் , எத்தனை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று தெரியுமா?
ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியமாகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட ஆதார் கார்டுகளில் போட்டோ மாற்றுவது தொடங்கி போன் எண் மாற்றுவது வரை இந்த ஆதார் கார்டை பலர் பல விஷ்யங்களுக்காக அப்டேட் செய்வது வழக்கம். அதெல்லாம் சரி ஆதார் விவரங்களை எத்தனை முறை புதுப்பிக்க முடியும்? என்று உங்களுக்கு தெரியுமா?
பாதுகாப்புக் காரணங்களால் சில வரம்புகள் உள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, பயனர் அதை பல முறை புதுப்பிக்க முடியாது, சிலமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
ஆதார் விவரங்களை எத்தனை முறை புதுப்பிக்கலாம்
-பெயர்: ஆதார் அட்டையில் உள்ள பயனரின் பெயரை இரண்டு முறை மாற்றலாம்.
-பிறந்த தேதி: ஆதாரில் உள்ள பிறந்த தேதியை ஒருபோதும் மாற்ற முடியாது. தரவு உள்ளீடு செயல்பாட்டின் போது பிழை ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
-முகவரி மற்றும் பாலின மாற்றங்கள்: முகவரி மற்றும் பாலினம் இரண்டையும் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
- UIDAI பிராந்திய அலுவலகத்திற்குச் செல்வதன் மூலம் ஆதாரின் பெயர், பாலினம் அல்லது ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு அப்பால் பிறந்த தேதியில் மாற்றங்கள் செய்ய முடியும் .
விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ஆதாரில் கூடுதல் மாற்றங்களைச் செய்வது எப்படி?
-பயனர் தங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினத்தைப் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
-ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையை மீறினால், பதிவு மையத்திற்கு மின்னஞ்சல், அஞ்சல் அல்லது UIDAI பிராந்திய அலுவலகம் மூலம் கோரிக்கை அனுப்பப்பட வேண்டும்.
-மாற்றம் கோரும் பயனர் அதற்கான காரணத்தையும், URN சீட்டின் நகலையும், ஆதார் விவரங்கள் மற்றும் துணை ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
- [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கூடுதலாக ஆதாரை புதுப்பிக்க முடியும்.
ஆதார் மாற்றம்: உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இனி மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கட்டணம் இல்லை: myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை ஆன்லைன் வழியாக இலவசமாக பெற முடிந்தது. .
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை.. மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும் முடியும்.
இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications