பர்ஸில் ஒளிந்திருக்கும் இந்த 1 தவறுதான் உங்க வறுமைக்கு காரணமா? ஓயாத பணமழை பொழிய இதை செய்தாலே போதும்
சென்னை: பணம் என்பது வெறும் காகிதமோ அல்லது உலோகமோ அல்ல, அது ஒரு வகையான ஆற்றல். அந்த ஆற்றலை நாம் எப்படி கையாளுகிறோம், எங்கு வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் வரவும் தங்குதலும் அமைகிறது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. அந்தவகையில், பணத்தை எப்படி பர்ஸில் வைத்து பராமரிப்பது என்பது குறித்தும் சில குறிப்புகளை சொல்லி வைத்துள்ளார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, நமது செல்வத்தின் சிறு பெட்டியாக விளங்கும் பர்ஸை முறையாக பராமரிப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலை ஈர்க்க முடியுமாம்..

வறுமை நீங்க டிப்ஸ்
இதற்கு முதலில், பர்ஸில் பணத்தைத் தவிர தேவையற்ற குப்பைகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். பழைய ரசீதுகள், காலாவதியான சீட்டுகள் அல்லது தேவையற்ற பேப்பர்கள் பர்ஸில் வைப்பது பணப்புழக்கத்தைத் தடுக்கும் எதிர்மறை அதிர்வுகளை உருவாக்கும்.
பர்ஸை எப்பவுமே தூய்மையாக வைத்திருப்பதே மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கான முதல் படியாகும். பணத்தை வைக்கும்போது அவற்றை கசக்காமல், வரிசையாகவும் நேர்த்தியாகவும் அடுக்குவது மிகவும் முக்கியம். ரூபாய் தாள்களை தலைகீழாக வைக்காமல், முறையான வரிசையில் அடுக்கி வைப்பது செல்வத்தின் மீது நாம் காட்டும் மரியாதையைக் குறிக்கிறது.
பர்ஸில் பணம்
பர்ஸின் நிறம் கூட செல்வத்தை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கருப்பு அல்லது பழுப்பு நிற பர்ஸ்கள் பொதுவாக நிலைத்தன்மையை குறிக்கின்றன.
மேலும், பர்ஸில் ஒரு சிறிய துண்டு பச்சை நிறத் துணியை வைப்பது அல்லது பச்சைக் கற்பூரத்தை ஒரு சிறிய காகிதத்தில் மடித்து வைப்பது பணத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த வாஸ்து முறையாகக் கருதப்படுகிறது. பச்சைக் கற்பூரத்தின் வாசனை செல்வத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டது.
பர்ஸில் ஒளிஞ்சிருக்கும் ரகசியம்
அதேபோல், ஒரு சிறிய இலவங்கப்பட்டை துண்டை பர்ஸில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தையும் வாய்ப்புகளையும் தேடித் தரும். உடைந்த அல்லது கிழிந்த பர்ஸ்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அவை வறுமையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.
உங்கள் பர்ஸில் உங்கள் முன்னோர்களின் படங்களையோ அல்லது தெய்வங்களின் உருவங்களையோ வைப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ஓம் அல்லது சுவஸ்திக் போன்ற சின்னங்களை வைத்துக்கொள்ளலாம். பணத்தை வைக்கும் பாக் அல்லது பர்ஸை எப்போதும் தரை போன்ற தாழ்வான இடங்களில் வைக்காமல், மரியாதைக்குரிய உயரமான இடங்களில் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
பணம் தங்குவதற்கு ஆன்மீக ரீதியான சில பரிகாரங்களும் அற்புதமான பலன்களைத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபடுவதுடன், அன்றைய தினம் உப்பு வாங்குவது வீட்டில் ஐஸ்வர்யத்தை பெருக செய்யும்.
கல் உப்பு சீக்ரெட்
உங்கள் வீட்டு வாசலில் அல்லது பணப்பெட்டியில் எப்போதும் ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பு வைத்திருப்பது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி பண வரவை அதிகரிக்கும்.
ஒவ்வொரு முறை பணம் செலவு செய்யும் போதும் மனதார நன்றி கூறிச் செலவு செய்வதும், மீண்டும் அது பல மடங்காக என்னிடம் வரும் என்ற நேர்மறை எண்ணத்துடன் இருப்பதும் பண ஈர்ப்பு விதியின் அடிப்படை ரகசியமாகும். மேலும், தான தர்மங்கள் செய்வது, குறிப்பாக பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பது என்பது உங்கள் கர்ம வினைகளைக் குறைத்து செல்வத்தின் பாதையைத் திறந்துவிடும் என்கிறார்கள் பெரியவர்கள்..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications