Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எலும்பும் தோலுமாய்.. ஆளே அடையாளம் தெரியாமல்.. நம்ம விஜயகாந்த்தா இது.. என்னாச்சு? உறைந்து போன தமிழகம்

விஜயகாந்த்தின் தற்போதைய போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த்தை இன்று பார்த்துவிட மாட்டோமா? நாளை குணமாகி வந்துவிட மாட்டாரா? என்று ரசிகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் ஏங்கி தவித்து வரும்நிலையில், அவரது ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. ரெட் கலர் கண்களை வைத்து நம்மையெல்லாம் உருட்டி மிரட்டிய விஜயகாந்த்தா இது? என்றும், விஜயகாந்த் போட்டோ இது இல்லை என்றும் பல்வேறு கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.

Recommended Video

    ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கேப்டன் விஜயகாந்த்... ஷாக்கில் ரசிகர்கள், தொண்டர்கள்!

    பொதுவாக தமிழக மக்களுக்கு விஜயகாந்த் மேல் தனி பாசம் உள்ளது... அவருக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், முதலில் கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்வது நம் மக்கள்தான்!! இதற்கு காரணம் அவருடைய பிரத்யேக குணம்!

    இது தேமுதிக ஆரம்பித்தவுடன் திடீரென தனக்காக போட்டுக்கொண்ட திரை இல்லை.. இயல்பாகவே விஜயகாந்த்துக்கு உதவும் குணம் உள்ளது..

    இன்னல்கள்

    இன்னல்கள்

    பலவித சறுக்கல்கள், பலவித இன்னல்கள், பலவித ஏமாற்றங்களை கடந்துதான், 'விஜி' என்று செல்லமாக சினிமா உலகினரால் அழைக்கப்பட்டார்.. கண்ணுக்கு தெரியாத உதவிகள் பல அப்போதே ஆரம்பமாகிவிட்டன.. எத்தனையோ திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பெரிய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.. நூற்றுக்கணக்கான இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர்.

    பெருமை

    பெருமை

    ஏழை மக்களுக்கு செய்த உதவிகள் சொல்லி மாளாது... தினமும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பவர் யார் என்றால் விஜயகாந்த்தான். அது கல்விக்கான பண உதவியாக இருக்கும், அல்லது நலத்திட்ட உதவிகளாகவும் இருக்கும். அவரது இரக்க குணத்திற்கு உச்சக்கட்ட உதாரணமாக சொல்ல வேண்டுமானால், பொதுமக்களுக்கு இலவச மருத்துவமனை அமைத்து கொடுத்தது. இதனால் உயிர்பெற்று நடமாடுபவர்கள் லட்சத்திற்கும் மேல் என்று பெருமையாகவே சொல்லலாம்!

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    அரசியலையும் தாண்டி அனைவராலும் விரும்பப்படுபவர்கள் வெகு சிலரே.. அதில், மிக முக்கியமானவர் விஜயகாந்த்.. கடந்த சில வருடங்களாகவே இவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடவும் தளர ஆரம்பித்துவிட்டார்.. ஏராளமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அவரது பார்வை, பேச்சு, நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன.. "என் மக்களுக்கு ஒன்னுன்னா இந்த விஜயகாந்த் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டான்" என்று கர்ஜித்தவரா இப்படி மெலிந்துவிட்டார், தெளிவாக பேச முடியாமல் அவதிப்படுகிறாரே என்று மக்கள் புழுங்கினர்.

     நல்ல மனிதர்

    நல்ல மனிதர்

    எத்தனையோ பேரின் உயிரை காப்பாற்றிய விஜயகாந்த் என்ற நல்ல மனிதர் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனைகள் அவரது தொண்டர்கள் இன்றுவரை விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த்தின் தற்போதைய நிலை என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அதை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.. எலும்பும் தோலுமாக, மேலும் உடல் மெலிந்து அதில் காணப்படுகிறார் விஜயகாந்த்..

    மாத்திரைகள்

    மாத்திரைகள்

    தற்போதுவரை சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வதால், தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், இந்த போட்டோவில் மேலும் மெலிந்து காணப்படுவது, பலருக்கும் கண்களை கலங்க வைத்துவருகிறது.. விஜயகாந்த்தை இப்படி எங்களால் பார்க்க முடியவில்லை. நடிகர் சங்க முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்ததோடு, அரசியலிலும் தனித்து கம்பீரமாக வலம் வந்தவராச்சே.. நீங்க திரும்பி வரணும் அண்ணா.. அதே கம்பீரத்தோட வரணும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர்..

    கமெண்ட்டுகள்

    கமெண்ட்டுகள்

    மேலும் சிலர், சினிமா வாழ்க்கை மட்டுமே பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.. அரசியலுக்கு வந்திருக்க கூடாது.. அந்த குழந்தை மனது, பசித்தவர்களுக்கு உணவு வழங்கி அழகு பார்த்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் பல்லாண்டு வாழ்க என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும் சிலரோ, இது விஜயகாந்த்தே இல்லை, அவர் இப்படி இப்போது இல்லை, நன்றாக இருக்கிறார்.. இது போலி போட்டோ என்றும் மறுத்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+