ஏம்பா.. இது நம்ம கார்தானா? சந்தேகமாக கேட்ட எடப்பாடி.. தலைமை செயலகத்தில் நடந்த பரபர சம்பவம்!
சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் தன்னுடைய காரில் ஏறும் முன்.. ஏம்பா இது நம்முடைய கார்தானா என்று கேட்ட சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் சட்டசபை நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதற்காக அவர் தனது டோயோட்டா காரில் சென்று இருந்தார்.
அவர் எப்போதும் பயன்படுத்தும் ஆஷ் நிற டோயோட்டா கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சட்டசபை கூட்டம் முடிந்து வெளியே வந்தவருக்கு அதிமுக தொண்டர்கள் பலர் மரியாதையை செய்தனர்.

காரி மாறி ஏறினார்
அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடியை சூழ்ந்து நின்று அவரிடம் பேசிக்கொண்டு இருந்தனர். இவர்களிடம் பேசிக்கொண்டே வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு நின்ற ஆஷ் நிற டோயோட்டா காரில் ஏற சென்றார். அப்போது அருகில் இருந்த போலீஸ் எடப்பாடி அருகே சென்று.. இது உங்கள் கார் இல்லை சார் என்றார். உடனே எடப்பாடி அந்த போலீசை உற்று பார்த்தார் .. அதன் பின் தலையில் கை வைத்து தப்பான காரில் ஏற போய்விட்டேனே என்று கூறிக்கொண்டே சட்டென அங்கிருந்து நகர்ந்தார்.

உதயநிதி கார்
பின்னர்தான் அந்த கார் திமுக எம்எல்ஏ உதயநிதியின் கார் என்று தெரிய வந்தது. எடப்பாடியின் ஆஷ் நிற டோயோட்டா கார் முன் பக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கிருந்து நடந்து சென்று தனது காரில் ஏறினார். இரண்டு காரும் ஒரே மாதிரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது. இந்த விஷயம் இணையம் முழுக்க வைரலானது. அதை பற்றி சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீங்கள் என் காரை எடுத்து செல்லலாம்.

உதயநிதி கிண்டல்
மூன்று நாட்களுக்கு முன்பு நானும் கார் மாறி எடப்பாடி பழனிசாமி காரில் ஏற சென்றேன். காரின் முகப்பில் ஜெயலலிதா புகைப்படம் இருப்பதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டேன். நீங்க கண்டிப்பா என் காரை எடுத்து செல்லலாம். ஆனால் அந்தக் காரை எடுத்துக் கொண்டு தயவு செய்து கமலாலயத்திற்கு மட்டும் செல்ல வேண்டாம், என்று உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக குறிப்பிட்டார்.
Recommended Video

நம்ப காரா?
இந்த நிலையில்தான் இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பணி நிமித்தமாக தலைமை செயலகம் வந்தார். திரும்பி செல்லும் போது தன் கார் அருகே சென்றதும்.. ஏன்பா இது நம்ம கார்தான? அன்னைக்கு மாதிரி மாத்தி காரை ஏத்தி விட்டுடாதீங்கப்பா? கரெக்ட்டா ஏத்தி விடுங்க என்று கூறினார். இதை கேட்ட அதிகாரிகள் கலகலவென்று சிரிக்க தொடங்கினர். அங்கிருந்த அதிகாரி உங்க கார்தான் சார் என்று உறுதி செய்ததும்.. அதில் ஏறி கும்பிட்டபடி அங்கிருந்து எடப்பாடி கிளம்பி கிளம்பி சென்றார்.
-
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications